English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
involution,
n. சிக்கவைத்தல், சுற்றி வளைத்தல், சிக்கல், உட்புறமாக வளைதல், உட்சுருள்வு, உட்சுருள்வுப்பகுதி, சிக்கல் வாய்ந்த இலக்கணக் கட்டமைவு, (கண) விசை அமுக்கம்.
involve
v. ஒன்றுக்குள் ஒன்று வைத்துச் சுருட்டு, பொதி, திருகு சுருளாகச் சற்று, சிக்கவை, சிக்கலாக்கு, சூழ்ந்து கொள், உள்ளடக்கு, உட்கொண்டிரு, சேர்த்திணைத்திழுதொக்க பொருளாகக்கொள், தொடர்புடையதாயிரு, சேர்த்திணைத்துக்கொண்டிரு, (கண) விசையேற்று, புரியாதபடி செய், நினைவிலும் வடிவத்திலும் புரியாதபடி செய்.
involvement
n. சிக்கலாக்குதல், தேர்த்திணைத்தல், பொருளியல் சிக்கல்நிலை, சிக்கலான செய்தி.
invulnurable
a. ஊறு செய்ய முடியாத, காயப்படுத்த இயலாத.
inward
a. உட்புறமாக அமைந்துள்ள, மனத்துள்ள, ஆன்மிகமான, உள்நோக்கிய, (வினையடை) மனத்தினுள், ஆன்மதளத்தில், உட்புறநோக்கி, உட்புறத்தில்.
inwardly
adv. உட்புறத்தில், உட்புறமாய், உள்ளுக்குள்ளாக, மனத்துள், தனக்குள்ளாக, உரத்துப் புறம்வெளிப்படாமல்.
inwardness
n. உள்ளியல்பு, உள்நோக்கிய பண்பு, ஆன்மிக நிலை.
inwards
-1 n. pl. குடல், உள்ளுறுப்புகள்.
inweave
v. கலந்துபின்னு, கலந்து நெய்து இணை, பின்னிச் சிக்கலாக்கு.
inwrought
a. துணி வகையில் சித்திரம் அல்லது கோலஙக்களால் அணி செய்யப்பட்ட, துணிமேல் வரையப்பட்டுள்ள,. சித்திர வேலைப்பாடு பொருந்திய, நெருக்கமாக உள்ளாரப் பின்னிக் கலந்துள்ள.
inyala
n. தென் ஆப்பிரிக்க மான் வகை.
iodide
n. கறையகை, பிறிதொரு தனிமத்தோடு கறையம் சேர்ந்டத கூட்டுக்கலவை.
iodine
n. கறையம், கரியப்பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும் இயல்புடைய தனிமம்.
iodoform
n. கறைய நச்சுத்தடை மருந்து, நச்சுத்தடைக் காப்பாகப் பயன்படுத்தப்படும் கறைச்சேர்மம்.
iolite
n. அலுமினியக் கன்மம் இரும்பு வெள்ளிமம் ஆகியவை இணைந்த நீல அல்லது ஊதாநிறச் சேர்மவகை.
ion
n. இயனி, மின்மயத்துகள், நீர்க்கரைசலிலும் சேண்வெளியிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள்.
Ionian
n. அட்டிகா மேற்கு ஆசியா மைனர் முதலிய நிலப்புரப்புக்களில் பண்டு பரவிய கிரேக்க இனப் பிரிவின் உறுப்பினர், (பெயரடை) அயோனியாவைச் சார்ந்த.
Ionic
a. அயோனியாவைச் சார்ந்த, கிரேக்க இனத்துக்குரிய அயோனியப் பிரிவு சார்ந்த.
ionium
n. சேண்மம், விண்மத்திலிருந்து கிடைக்கும் அணுச்சிதைவார்ந்த நுண்ணதிர்வுடைய தனிப்பொருள் வகை.
ionosphere
n. மீவளிமண்டலம், வளிமண்டலத்தின் மேல் தளப்பகுதி.