English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
heyduck
n. போலந்து நாட்டில் பணிப்பட்டயம் தாங்கிய பணியாள், குடிஉயர்மதிப்புப்பெற்ற ஹங்கேரி நாட்டுப் படைத்துறை வகுப்பினர்.
hi
int. கவன ஈர்ப்புக் குறிப்பு.
Hi-tech industries
உயர் - தொழில்நுட்பத் தொழிலகம் (தொழில் நுட்பம்)
hiatus
n. பிளவு, இடைவாய், முறிவு, சிறுகோளாறு, வாதத்தொடர்பில் இடைக்குறை, இருவேறிசைகளுக்குரிய இரண்டு உயிரொலிகளுக்கிடையே ஏற்படும் பிளவு.
hibernater
v. விலங்குகள் வகையில் குளிர்கால முழுவதும் செறிதுயல் கொள்ளு, ஆட்கள் வகையில் மிதமண்டலத்தில் ஓய்வு கொள், செயலற்றிரு.
Hibernian
n. அயர்லாந்து நாட்டவர், (பெ.) அயர்லாந்து நாட்டுக்குரிய.
Hibernicism
n. அயர்லாந்து மக்களுக்குரிய மரபு, அயர்லாந்து மக்களுக்குரிய மரபுத்தொடர், இயல்வெடித்தொடர், அயர்லாந்து மக்களிடையே கேட்பவர்களுக்கு அதிர்ச்சி அல்லது நகைப்பு மூட்டும் வகையில் அமையும் சொற்றொடர்.
hibiscus
n. பண்படுத்தப்பட்ட தோட்டச்செடி வகை.
hic jacet
n. (ல.) 'இவ்விடத்து உறைகிறார்' என்னும் கல்லறை வாசகம்.
hiccup
n. விக்கல், (வி.) விக்கு, விக்கல் எடு, விக்கிவிக்கித் தெரிவி.
hickory
n. திண்ணிய பளுவான வெட்டுமரமும் வாதுமை போன்ற கொட்டையும் தரும் வடஅமெரிக்க மரவகை.
hid, v. hide
-2 என்பதன் இறந்தகால வடிவம், முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
hidalgo
n. ஸ்பானிய நன்மகன்.
hidden, v. hide
-2 என்பதன் பெருவழக்கான முடிவெச்ச வடிவம்.
hide
-1 n. விலங்கின் தோல், பதனிட்ட தோல், (வி.) தோலுரி, கசையாலடி.
hide-and-seek
n. கண்ணாம்பூச்சி விளையாட்டு, ஒளிந்தோடும் விளையாட்டு.
hide-bound
a. உடலொடு தோல் ஒட்டிய, மரவகையில் வளர்ச்சி தடைப்படும்படியான அளவில் மரப்பட்டை மரத்துடன் ஒட்டிய, முரட்டுப் பிடிவாதமான, பிடிமுரண்டான, வெறிப்பற்றுடைய, குறுகிய மனப்போக்குடைய.
hideous
a. வெறுப்பூட்டுகிற, அருவருப்பான, பயங்கரமான.