English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hamlet
n. சிறு கிராமம், திருக்கோயில் இல்லாத சிறு கிராமம், தொட்டி, சிற்றுர்.
hammam, hammum
நீராடுதற்கான விடுதி, துருக்கி நாட்டுக் குளிக்கும் அறை.
hammer
n. சுத்தி, சம்மட்டி, கடிகார நரம்பு, இசைப்பெட்டி நரம்பு, சுடும் படைக்கலத்தில் மருந்தினை வெடிக்கவைக்கும் பொறியமைவு, ஏலம் போடுவோர் ஒரு பொருள் விற்கப்பட்டுவிட்டது என்பதை அடித்து அறிவிக்கப்பயன்படுத்தும் மரக்கொட்டாப்புளி, காதில் உள்ள சிறு எலும்பு, (வி.) சம்மட்டியால் அடி, சம்மட்டியால் அடித்துச் செலுத்து, சம்மட்டியால் அடித்து உருவாக்கு, கடுந்தண்டனைக் கொடு, போரில் அல்லது விளையாட்டில் அடியோடு தோல்வியுறும் படிசெய், பங்கு மாற்ற வகையில் சம்மட்டியால் மூன்று முறை அடித்து தவறியவரென்று அறிவி, பண்டத்தின் விலை இறங்கும்படிசெய், விற்றல் வாங்கல்களில் சோர்வூட்டு.
hammer-beam
n. (க-க.) முதன்மையான உத்தரத்துக்குக் கீழே சுவரிலிருந்து பிதுங்கி வந்திருக்கும் தூலம்.
hammer-cloth
n. வண்டியில் வலவன் இருக்கையை மூடி இருக்கும் ஒப்பனைத் துணி.
hammer-fish
n. சம்மட்டி போன்ற தலையையுடைய சுறாமீன் வகை.
hammer-head
n. சம்மட்டியின் தலைப்பாகம், சம்மட்டி போன்ற தலையையுடைய சுறாமீன் வகை, ஆப்பிரிக்க பறவை வகை.
hammer-lock
n. முதுகுக்குப்பின் வளைத்து வைத்துக்கொள்ளும் மல்லன் கைப்பிடி.
hammer-toe
n. (மரு.) கால் விரல்களில் ஒன்று நிலையாக மேல் நோக்கி வளைந்து மடிந்திருக்கும் அங்கக்கோணல்.
hammerman, hammer-smith
n. கருமான.
hammock
n. கித்தான் அல்லது வலையினாலான ஏனை போன்ற தூங்கு மஞ்சம்.
hamper
-1 n. சிப்பங்கட்டுதற்கான கூடைப்பெட்டி, பெரிய கூடை, தின்பண்ட அடைப்பை, மதுக்குப்பி அடைப்பை.
Hampton Court
n. தேம்ஸ் ஆற்றின் கரையில் லண்டனுக்கு அருகே அரசர்களின் அரண்மனையாய் இருந்த கட்டிடம்.
hamshackle
v. குதிரை முதலியவற்றின் தலையையும் முன்னங்காலையும் கயிற்றால் பிணைத்துத் தளைபூட்டு, விலங்கிடு, தடைசெய்.
hamster
n. கன்னப்பைகளுள்ள பெரிய எலிபோன்ற கொறி விலங்கு வகை.
hamstring
n. மனிதர்களின் பின் தொடைத் தசைநார், நாற்கால் விலங்குகளின் பின்னங்கால் பின் தொடையிலுள்ள பெரிய தசைநார், (வி.) பின் தொடை நரம்புகளை வெட்டி முடமாக்கு.
hamulus
n. (உள்., வில., தாவ.) கொக்கி போன்ற முனைப்பு.
hand
n. கை, நுதிக்கை, குரங்கின் நான்கு கால்களிலும் நுதிப்பகுதி, நாற்கால் விலங்கின் முன்னங்கால், மேலாண்மை உரிமை, செயலாட்சி, செயல்முதல், செயலிற் பங்கு, திருமண வாக்குறுதி, ஏதாவதொன்றைச் செய்பவர், ஒன்று வெளிப்படுவதற்கு மூலமாயிப்பவர் அல்லது மூலமாயிருப்பது, திறமை, வேலைப்பாட்டுத்திறம் அல்லது பாணி, மேடைக்கோற்பந்தாட்டம்-ஆவட்டம், எழுதும் விதம் அல்லது பாணி, கையெழுத்து, கைபோன்ற பொருள், கடிகாரத்தின் முள் அல்லது ஊசி, வாழைக்குலை சீப்பு, புகையிலைக்கட்டு என்பதுபோல் பல்வேறு பண்டங்களின் குறிப்பிட்ட அளவு, நான்கு அங்குலம் கொண்ட நீட்டலளவை, சீட்டாட்ட வகையில் ஓர் ஆட்டக்காரருக்குக் கிடைத்த சீட்டுக்கள், சீட்டுக்களை வைத்துக்கொண்டு இறங்க இருப்பவர், (வி.) கையினால் ஒருவருக்கு உதவி செய், கைகொடுத்து உதவு, (கப்.) பாய்சுருட்டு, கொடு, ஒப்புவி.
hand-bag
n. மகளிர் கைப்பை.
hand-ball
n. எறிந்து பிடிக்கும் பந்து விளையாட்டு.