English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gubernatorial
a. ஆளுநரைச் சார்ந்த, ஆளுநருக்குரிய, ஆட்சிக்குரிய.
gudgeon
-1 n. தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் சிறு நன்னீர் மீன்வகை, ஏமாளி, (பெ.) அறிவில்லாத, ஏமாளியான (வினை) ஏமாற்று.
gudgeon-pin
n. பொறிவண்டி, வகையில் உந்து தண்டின் முளை.
Gueber, Guebre
பார்சி நெறியாளர், நெருப்பு வழிபாடு செய்பவர்.
guelder-rose
n. பனிவெள்ளை நிறமான வட்ட மலர்க்கொத்துச் செடிவகை.
Guelf, Guelph
பேரரசருக்கெதிராகப் போப்பாண்டவரை ஆதரித்த இடைநிலைக்கால இத்தாலிய நாட்டின் கட்சி உறுப்பினர்.
guerdon
n. பரிசு, பயனுதியம், (வினை) பரிசு கொடு, ஊதியப்பயனனி, உழைப்பீடு செய்.
Guernsey
n. இங்கிலிஷ் கால்வாயிலுள்ள தீவுகளில் ஒன்று, கேன்சி தீவைச் சேர்ந்த பசுவகை.
guerrilla
n. முறையற்ற போர், சிறுசிறு கும்பல்கள் தனித் தினயாகத் தொடுக்கு போர், முறையற்ற போரில் ஈடுபடுபவர், (வினை) போர்வகையில் முறையற்ற, முறையற்ற போர்வகை சார்ந்த.
guess
n. உய்த்துணர்வு, ஊகம், குத்துமதிப்பு, பாணிப்பு, வைப்புக்கோள், தற்பொழுதைய முடிபு, மேற்கொள் முடிபு, குருட்டுப்போக்கான குறிப்பு, (வினை) ஊகி, உய்த்துணர், குத்துமதிப்பாகக் கருது, நேரடியாக அறியாமலே மதித்துணர், இயன்முடிவாகக் கருது, குருட்டுப்போக்காகக் குறிப்பீடு, தற்பொழுதைய முடிபு மேற்கொள், ஆராய்வின் துணையில்லாமலே கூறத்துணி.
guesswork
n. உய்த்துணர்தல், ஊகித்தல், ஊக விளைவு.
guest
n. விருந்தினர், உணவுவிடுதி முதலியவைகளில் தங்கி இருப்பவர், விலங்கு தாவர ஒட்டுண்ணி.
Guest house
விருந்தகம், விருந்தில்லம், விருந்து மனை, விருந்தினர் மாளிகைக்ஷீ இல்லம்
guest-chamber
n. விருந்தினர் அறை.
guest-house
n. விருந்தினர் மாளிகை, உயர்தரத் தங்கல்விடுதி, மடத்து வரவேற்பு மனை, ஆதரவகம்.
guest-room
n. விருந்தறை, விருந்தினர் தங்கும் பகுதி.
guest-rope
n. வால் கயிறு, படகினை நிலைப்படுத்துவதற்காக இணைக்கப்படும் இரண்டாவது கயிறு, தொங்கு கயிறு, கூடவேவரும் படகுக்குப் பிடிகொடுப்பதற்காகக் கப்பலுக்கு வெளியே தொங்கவிடப்படும் கயிறு.
guestnight
n. விருந்திரவு, கழகங்களிலும் கூட்டுப் பந்திக்குழுக்களிலும் கல்வி நிலையங்களிலும் வெளி விருந்தினரை வரவேற்று மகிழும் நாளிரவு.
guestwise
adv. விருந்தினர் என்னும் முறைமையில்.
guffaw
n. வெடிப்புச் சிரிப்பு, (வினை) உரக்கச்சிரி.