English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
guaranty
n. உத்தரவாத ஒப்பந்தம், ஈடு, பிணை, உத்தரவாதம் அளிப்பவர், உத்தரவாதத் தன்மை.
guard
n. காவல், காப்பு, விழிப்புநிலை, எச்சரிக்கைநிலை, குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை, தற்காப்பியக்கம், காவலர், பாதுகாப்பவர், மெய்க்காவல் வீரர், வாயிற்காவலர், படைக்காவல் வீரர், காவற்படை, பாதுகாப்புப் படை, இடர்காப்பமைவு, வாளின் கைப்பிடி, சிறு மணிப்பொறியின் சங்கிலி, கரை, ஓரக்குஞ்சம், ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு, மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை, மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை, (வினை) காவல் செய், பேணிப்பாதுகாப்புச் செய், அரண்காப்புச் செய், சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய், காப்பாற்று, விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு, (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு, பேச்சைத் தடுத்தாள், எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு, இடர்தடுத்துக் காத்துக்கொள், தற்காப்புநிலை மேற்கொள், பாதுகாப்பு ஏற்பாடு செய், காவற்படையின் அமைத்து வலுப்படுத்து, வழித்துணை செல், வழிக்காவல் செய், கவனி, விழிப்பாயிரு, முன்னெச்சரிக்கையாயிரு, முன்னேற்பாடு செய், முன்எச்சரிக்கை செய், கரைகாப்பிடு, ஓரக்குஞ்சமிடு.
guard-book
n. நெடுந்துண்டுகளுள்ள வெற்றுச் சுவடிச் சட்டம்.
guard-cell
n. (தாவ.) செடியினங்களின் பசும்புழை வாயருகிலுள்ள காப்புயிரணு.
guard-chain
n. கைம்மணிப்பொறி முதலிய வற்றைக் கட்டித் தொங்கவிடும் சங்கிலி.
guard-house
n. படைவீரர்கள் தங்கியிருப்பதற்கான விடுதி, தவறிழைத்தவர்களை அடைத்து வைத்திருப்பதற்கான இடம்.
guard-rail
n. விழாதபடி தடுக்கும் கைப்பிடிக் கம்பியழி.
guard-ring
n. தடை, ஒத்து, விரல் மோதிரம் நழுவாதிருக்கச் செய்யும் காப்புக் கணையாழி.
guard-ship
n. துறைமுகத்தைக் காப்பதுடன் மாலுமிகள் தங்கள் கப்பல்களில் சென்று சேருகிற வரையில் அவர்களுக்குத் தங்க இடங்கொடுக்கும் போர்க்கப்பல்.
guardant
a. (கட்.) பார்ப்பவரை நோக்கி முகப்புபக்கம் திருப்பப் பெற்றுள்ள.
guarded
a. விழிப்புடைய, எச்சரிக்கையான, விழிப்புடன் அளந்து கூறப்பட்ட, செம்மையாக்கப்பட்ட, கரை இணைக்கப்பட்ட.
guardian
n. பாதுகாப்பாளர், ஆதாவாளர், (சட்.) முதுகணாளர், சிறுவர்-பித்தர் போன்றவர்களின் பொறுப்பேற்கும் பாதுகாவலர், இரவலர்சட்டச் செயலாற்றும் குழு உறுப்பினர், பிரான்சிஸ்கன் துறவிமடத்து முதல்வர், (பெ.) ஆதரவாயிருக்கிற, பாதுகாக்கிற.
guardian ship
n. பாதுகாவலர் பதவி, சட்டப்படியான காப்புநிலை, பொறுப்பு, பாதுகாப்பு, காவல்.
guardless
a. ஆதரவற்ற, காப்பற்ற, காவலற்ற.
guards
n.pl. மன்னரின் மெய்க்காவல் படையினர், படைப்பிரிவு வகைகள்.
guardsman
n. மன்னரின் மெய்க்காவல் படையினருள் ஒருவர்.
guava
n. கொய்யாமரம், கொய்யாப்பழம்.
guayule
n. தொய்வகத்துக்கு மாற்றீடான பொருள்தரும் சாறுடைய மெக்சிகோ நாட்டுச் செடிவகை, மாற்றீட்டுத் தொய்வகம்.
gubernation
n. கட்டுப்பாடு, ஆட்சி.