English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
grumous
a. தடித்த, உறைந்த.
grumpish, grumpy
முரணியல்புடைய, சிடுசிடுப்புள்ள.
Grundyism
n. போலி ஆசாரம், பிறர் மெச்சுவதற்கான நன்னடத்தை.
grunt
n. பன்றியின் உறுமல், உறுமல் ஒலி, மீன்வகை, (வினை) உறுமு, முறுமுறுப்புக் காட்டு, உறுமுதல் வாயிலாகக் குறைபட்டுக்கொள், சலிப்புக்காட்டி உறுமு, சீறியுரை.
grunter
n. முறுமுறுப்பவர், பன்றி, மீன்வகை.
gruntle
n. உறுமொழி, விலங்கின் நீண்ட மோவாய், (வினை) உறுமு, உறுமிக்கொண்டேயிரு.
gruyere
n. சுவிட்சர்லாந்தில் செய்யப்படும் இளமஞ்சள் நிறமுடைய பசும்பாலாடைக் கட்டி.
grysbok,
சிறிய சாம்பல் நிறத் தென்னாப்பிரிக்க மான் வகை, வெள்ளைத்துய் உடைய சிவம்புநிற மரக்கொட்டை வகை.
gtateful
a. நன்றியுடைய, நன்றியறிதலுள்ள, ஏற்றுக்கொள்ளத்தக்க, இனிமையான.
guacharo
n. எண்ணெய் எடுக்கப்பெறும் தென் அமெரிக்க பறவை வகை.
guaiac
n. மருந்து சரக்காகப் பயன்படுத்தப்படும் மேற்கு இந்திய புதர்ச்செடி வகையின் பச்சைப்பழுப்பு நிறக்கட்டை, புதர்ச்செடி வகையிலிருந்து கிடைக்கும் பிசின், புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
guaiacum
n. மேற்கிந்திய மரவகையின் புதர்ச்செடி இனம், புதர்ச்செடி வகைகளின் பச்சைப் பழுப்புநிறக்கட்டை, புதர்ச்செடி, கைகளிலிருந்து கிடைக்கும் பிசின், புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
guan
n. வேட்டையாடுதற்குரிய அமெரிக்க கோழியினப் பறவை வகை.
guana
n. பெரிய பல்லி வகை, உடும்பு.
guanazolo
n. புற்றுநோயில் புற்றுப் பகுதிகளை ஊட்ட மறுத்து ஒழிக்கும் முயற்சிக்குத் தேர்வு முறைவான மருந்தாயுதவும் பல்கூட்டுச் சேர்மப்பொருள் வகை.
guanin, guanine
கடற்கோழி எச்சத்தின் கூறு ஆகிய இளமஞ்சட் பொருள்.
guannaco
n. ஒட்டை இனத்தைச்சேர்ந்த செம்பழுப்புக் கம்பிளி மயிரையுடைய தென் அமெரிக்க காட்டு விலங்கு வகை.
guano
n. உரமாகப் பயன்படுத்தப்படும் கடற்கோழியின் எச்சம், மீனிலிருந்து செய்யப்படும் செயற்கை உரம்.
guarantee
n. உத்தரவாதம், பொறுப்புறுதி, உறுதியுரை, ஈடு, பிணையப்பொருள், உத்தரவாதம் கொடுப்பவர், பிணையம் நிற்பவர், ஈடுகட்டுபவர் செயல் ஒப்பந்தம் செய்பவர், உத்தரவாதி, செயற்பொறுப்பு ஏற்பவர், உறுதியுரை கொடுக்கப் பெறுபவர், (வினை) பிணைப்படு, உத்தரவாதம் செய், ஒப்பந்தப் பொறுப்புறுதி ஏற்றுக்கொள், நிகழ்ந்தது அல்லது நிகழ இருப்பது பற்றிச் சான்றுறுதி கூறு, செயலுறுதி கூறு, பெற்றுத் தரும் உறுதி கூறு, காப்புறுதி செய்.
guarantor
n. உத்தரவாத ஒப்பந்தத்தார், பொறுப்புறுதி அளிப்பவர்.