English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
greywacke
n. உருண்டையான கூழாங்கற்களும் மணலும் சேர்ந்த உருவான கலவைப் பாறைவகை.
greywether
n. மேயும் ஆட்டுத் தோற்றமளிக்கும் பாறை வகை.
griddle
n. அப்பம் சுடும் இருப்புக்கல், சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டி, (வினை) சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டியால் மறை.
gride
n. வெறுப்புண்டாக்கும் ஓசை, சுரண்டும் ஒலி, (வினை) ஓசைபடக் சுரண்டு, கிறீச் சொலியிடும்படிக் கொத்து.
gridiron
n. இறைச்சி மீன் முதலியான சுடுதற்கான இருப்புகம்பிச் சட்டம், (கப்,) கப்பற் பட்டடை, நாடக மேடையில் திரைகளைக் கீழே விடுவதற்காக மேலே அமைக்கப்பட்டச் சட்டம், கப்பல் கட்டுமானச் சட்டம், மணிப்பொறியின் சரிமான ஊசற்குண்டின் இணைப்பமைவு.
gridiron-pendulum
n. மணிப்பொறியில் கம்பிகள் வெவ்வேறு வகையான உலோகங்களால் செய்யப்பட்டு இணைக்கப் பட்ட சரியான ஊசற்குண்டு.
grief
n. துயரம், கவலை, ஆழ்ந்த மனத்துன்பம், கடுங்கழி விரக்கம்.
grievance
n. மனக்குறை, குறை.
grieve
v. வருந்து, துயரப்படு, துயரமளி.
grievous
a. துன்பந்தருகிற, பொறுக்கமுடியாத, பெருங்கேடு செய்கிற, இடர்ப்பாடான, தீங்கான.
griff, griffin
-1 n. ஆங்கிலோ இந்திய வழக்கில் புதிதாக வந்திற்ங்கிய ஐரோப்பியர், அனுபவமற்றவர், பந்தயத்தில் மாட்டப்படாத புது மட்டக் குதிரை, சிறு பெண்ணின் காவலர், துணைக் காவற்பெண்டு.
griffin(2), griffon
-1 n. சிங்கத்தின் உடலிற் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட பழங்கதைக் கற்பனை விலங்கு.
grig
n. சிறு விலாங்குமீன், வெட்டுக்கிளி, சுவர்க்கோழி.
grill(1),
n. இறைச்சி முதலியன சுடும்இருப்புத்தட்டம், இருப்புத்தட்டத்திலிட்டுச் சுட்ட உணவு, (வினை) வறு, சுடு, வாட்டு, சித்திரவதை செய், கடுந்துயரில் ஆழ்த்து, கடுந்துன்பத்திற்கு ஆளாகு, காவல் துறையில் குறுக்குக் கேள்விகளுக்கு ஆட்படுத்து, சிப்பியைத் தட்டத்திலிட்டுச் சமை.
grillade
n. சதுப்புநிலத்து வீடுகளுக்குக் குறுக்கு உத்திரங்களால் போடப்படும் கனத்த அடித்தளம்.
grillage
n. வறுவல், இரும்புத் தட்டத்திலிட்டு வறுக்கப் பட்டது.
grille
n. பின்னல் அழித்தட்டி, வலைத்தட்டி, கன்னிமாடங்களில் பின்னலழிப் புழைக்கதவு, மாமன்றப் பொது அவைப்பின்னற் புழைவாய்க் கதவு, வரிப்பந்தாட்ட மதிற்புழைவாய், மீன் குஞ்சுபொரிக்கும் சட்டம்.
Grille works
இரும்புக் கிராதிகள்
grilled
a. நீண்ட சிறு சதுரப்புடைப்பாக அழுத்தப்பட்ட.