English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gastronomy
n. சுவையுணவுக்கலை.
gastrotomy
n. உணவு ஊட்டுதற்காக இரைப்பை அறுவை.
gate
n. வாயில், கோட்டை முன்வாயில், வாயில் முகப்பு, முகப்பு வளைவு, வாயிற் கதவம், வாயிற் கதவுச்சட்டம், செல்வழி, இடுக்கமான மதகு, மடைவாய்க்கதவு, மலைக்கணவாய், நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம், ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை, வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை, (வினை) வாயில் அமைத்து இணை, குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி.
gate-crash
v. கட்டணம் செலுத்தாமல் அல்லது அழைப்பின்றி நுழை.
gate-crasher
n. அழையாது நுழைபவர்.
gate-keeper
n. வாயிலோன், வாயிற்காவலன், வண்ணத்துப்பூச்சி வகை.
gate-legged
a. மேசைவகையில் மேற்புறத்தின் பகுதிகள் மடிந்து விழுவதற்கு வசதியாகக் கதவுச்சட்டம் போன்ற அமைப்புடைய கால்களைக் கொண்ட.
gate-meeting
n. நுழைவுக்கட்டண வாயிலிடம்.
gate-money
n. நுழைவுத் தொகை.
gate-post
n. வாயிற்படிக் கம்பம், கதவு மாட்டப்பெறுகிற அல்லது மூடப் பெறுகிற கம்பம்.
gate-tower
n. வாயிற்கோபுரம், நுழைவாயில் தூபி.
gated
a. வாயிலையுடைய, வாயில்களைக் கொண்ட, மாணவர் வகையில் குறிப்பிட்ட நேர வாயிலடைப்புத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட.
gatehouse
n. (க,க) நுழைவாயிற் கட்டிடம், பூங்காமனை, நகர வாயில்மீதாக அமைவுறும் சிறைக்கூடம்.
gates of death, jaws of death
சாவின் வாயில், மாளும் தறுவாய்.
gateway
n. நுழைவாயில், நுழைவாயிலண்டையிலுள்ள கட்டுமானம்.
gather
n. ஆடைத்திரைவு, ஊடு நுலிழுப்பதனால் பெறப்படும் ஆடைச் சுருக்கம். (வினை) திரட்டு, ஒருங்குகொணர், திரள்வுறு, ஒருங்கு கூடு, கூட்டமாகக் கூடு, ஈட்டிச்சேர், பொருள் திரட்டிக் குவி, அறுவடையில் விளைவாகப் பெறு, இணைந்து மிகுதியாகு, ஆற்றல் முதலியவற்றை வரவழை, மீளப்பெறு, ஊடுநுலிழுத்து ஆடை திரைவி, மலர்கொய்து சேர், பறி, நிலத்திலிருந்து பொறுக்கியெடு, சிதறியவற்றைச் சேர்த்துக்குவி, திரட்டிக்குவி, சீழ் கட்டியாகி வீங்கு, மொத்தையாகு, உய்த்தறி, அனுமானி, அறியப்பெறு,திரண்டெழு, நெருக்கடிநிலையை அடை.
gatherer
n. திரட்டுபவர், குவிப்பவர், பறிப்பவர், கண்ணாடி செய்தொழில் வகையில் ஊதுகுழலின் முனையில் உருகு குழம்பைத் தோய்த்தெடுப்பவர்.
gathering
n. சேகரிப்பு, சீழ் கொண்ட வீக்கம், மக்கள் திரள், கூட்டம்.
gathering-coal
n. காலைநேரம் வரையில் எரிந்து கொண்டிருப்பதாக நெருப்பிற் போடப்படும் பெரிய நிலக்கரித்துண்டு.
gathering-cry
n. பொருநர் கூவொலி.