English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
familiar
n. துணைவர், தோழர், போப்பாண்டவர் அணுக்கத்தொன்டர், (பெ.) நெருங்கிய பழக்கமுள்ள, பழகிய நட்புடைய, பழக்கப்பட்ட, அறியப்பட்ட, நன்கு தெரிந்த, பொதுவான, பொதுப்படையான, நடப்பிலுள்ள, வழக்கமாக நிகழ்கிற, ஆசாரக் கட்டுப்பாடு இல்லாத, தாராளமாகப் பழகுகிற.
familiarities
n. pl. காதற் கொஞ்சுதல் முதலியன, நடைமுறை ஆசாரமின்மை, மேலோர்-கீழோர் வேறுபாடு மதிக்காமை.
familiarity
n. நெருங்கிய நட்பு, கட்டுப்பாடின்மை.
familiarize
v. பழக்கப்படுத்து.
family
n. குடும்பம், பெற்றோர்-குழந்தைகள்-பணியாட்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர் தொகுதி, ஒருவருக்குரிய குழந்தைகளின் தொகுதி, ஒருவருடைய குழந்தைகள், குடும்பங்கள் ஒருங்கினைந்து வாழும் சமுதாயம், முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு, இனம், நேசத்தொடர்புகொண்ட இனத்தொகுதி.
famine
n. பஞ்சம், வறட்சி, வற்கடம், முடை, குறைபாடு, கருப்பு, உணவுப்பஞ்சம், பசி, பட்டினி.
famish
v. கடும்பசிநிலைக்குத் தாழ்த்து, கடும்பசி விடாய்களினால் அவதியுறு, உணவு நீரின்றி மடி.
famous
a. புகழ்பெற்ற, பலரறிந்த, குறிப்பிடத்தக்க, முதன்மையான, மிகச்சிறந்த.
famulus
n. செப்பிடுவித்தைக்காரரின் வேலையாள்.
fan
-1 n. விசிறி, சுழல் விசிறி, காற்றோட்டச் சுற்றுப்பொறி, வீசு முறம், பொலிகளத்தில் பழ்ர் தூற்றும் கருவி, விசிறி போன்று பரவலான வடிவுடைய பொருள், வண்டல் படிவிடம், கப்பலைக் காற்றோட்டத் திசைப்படுத்தும் சிறுபாய், திமிங்கில வால்சிறையலகு, வானுர்திச் சுழல் விசிறி அலகு, சுழல் விசிறிப் பொறியால் ஏற்படும் காற்றியக்கம், விசிறிவடிவச் சிற்ப அணிவேலை, புள்வாலிறகு, இறக்கை, விசிறிவடிவ இலை, நிலக்கரி இயக்கும் பணியாளரின் நீர் ஊறாத அகலமான பின் விளிம்புள்ள குல்லாய், (வினை) பதர்தூற்று, புடை, பொலிகளம் தூற்று, தூற்றித்தள்ளு, மென்காற்றுப்பட வீசு, விசிறி அழலெழத்தூண்டு, வீசிக்குளிர்ச்சியாக்கு, காற்றுவகையில் மெல்ல வீசு, விசிறி வடிவில் பரவலாக்கு, விசிறி போல் பரவலாகச்செல்.
Fan regulator
விசிறி கலிங்கு, விசிறி ஒழுங்குபடுத்தி, விசிறி வேக இயக்கி
fan-tan
n. கிண்ணத்தின்கீழ் மறைத்தவைக்கப்பட்ட நாணயங்கள் முதலிய வற்றின் எண்ணிக்கையை ஊகித்துச்சொல்ல வைக்கும் சீன சூதாட்டம், சீட்டுச் சூதாட்டம்.
fanatic
n. வெறியர், கொள்கை விடாப்பிடியர், அளவு மீறிய தவறான உணர்ச்சியார்வம் மிகுந்தவர், மதவெறியர், (பெ.) வெறியார்ந்த, சமயவெறி கொண்ட, கொள்கை விடாப்பிடியுடைய, மட்டுமீறிய உணர்ச்சியார்வம் வாய்ந்த.
fancier
n. வளர்ப்பார்வலர், நுண்திறப்பண்புகளை நோக்கி இனம்பயிற்றுவித்து உருவாக்குபவர்.
fanciful
a. மனம்போன போக்குடைய, தன்போக்காய் நடக்கிற, கட்டற்ற கற்பனைகளில் ஈடுபடுகிற, பொருந்தாப்புனைவுகளுக்கு இடங்கொடுக்கிற, முரண்புனைவான சித்திர வேலைப்பாடுடைய, சித்திர அமைப்புள்ள, விசித்திரமான, முரண்புதுமை வாய்ந்த, இயல்முரணிய, உண்மையல்லாத, கற்பனையில் மட்டுமுள்ள.
fancy
n. கற்பனை, மனத்திற்பாவிக்கும் திறம், தற்புனைவு, பாவனை, கருத்தில் தோன்றும் படிவம், மனத்தோற்றம், போலித்தோற்றம், மயக்கக்காட்சி, போலிப்புனைவு மருட்சிப்புனைவு, கட்டற்ற விருப்பம், மனம்போன போக்கு, ஆதாரமற்ற, நம்பிக்கை, தனி விருப்பு, விருப்பார்வம், காதல் ஈடுபாடு, விருப்பார்வப் பொழுதுபோக்கு, விருப்பார்வத்துறை ஆதரவாண்மை, விருப்பார்வத்துறை ஈடுபாடு, (பெ.) புனைவுருவான, விரும்பிய உருவுடைய, கற்பனாகாரமான, மனத்துக்குகந்த, கண்ணைக்கவர்கிற, இன்பார்ந்த, அழகுநயமிக்க, சித்திர வேலைப்பாடுடைய, கட்டற்ற, மனம்போனபோக்கான, பொதுநிலை கடந்த, பல்வண்ணமார்ந்த, நம்பமுடியாத, பொருந்தாப் பெருவிலையுடைய, (வினை) கருத்திற்புனைவு செய், கற்பனை செய், கருத்துருவாக்கிக்காண், மனத்திற் பாவனை செய், ஆர்வத்துடன் நம்பு, எளிதாக எண்ணு, ஆராயாது செய், ஆர்வத்துடன் விரும்பு, மகிழ்வார்வம் கொள், செருக்கி மகிழ், மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு.
Fancy stores
புதுமைப்பொருளகம், பல்பொருள் அங்காடி
fancy-dress
n. விருப்பார்வை உடை.
fancy-fair
n. விருப்பார்வச் சந்தை.
fancy-work
n. சித்திரத் துன்னல்.