English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fishing-rod
n. தூண்டிற்கோல், தூண்டில் முண் இணைக்கப் பட்ட நீண்ட கொம்பு.
fishing-tackle
n. வலை-தூண்டில் முதலிய மீன் பிடிக்குங்கருவித் தொகுதி.
fishwife, fish-woman
n. மீன் நொடையள்.
fishy
a. மீனாலான, மீன்போன்ற மணச்சுவையுடைய, மீன்வடிவான, ஐயுறவான, உறுதியற்ற, இருபொருளுடைய.
fissidactyl
a. பிளவுண்ட விரல்களையுடைய.
fissile
a. பிளவுப்படக்கூடிய, பிளக்கும் இயல்புடைய.
fissiliingual
a. பிளவுபட்ட நாக்குடைய, இருபிளவான நாக்கு கொண்ட.
fissility
n. பிளவுபடுந் தன்மை.
fission
n. (உயி.) புது உயிரணுக்களின் தோற்றத்திற்காக உயிரணுக்களைப் பிளத்தல், இன்பப்பெருக்கத்துக்காக உயிரணு வெடித்தல், அணுப்பிளப்பு, அணுவின் கருவுள் பிளப்பு.
fissiparous
a. பிளவுற்று இனம்பெருக்குகிற, பிளவுண்டாக்குகிற.
fissirostral
a. ஆழ்ந்த பிளவுடைய அலகுடைய.
fissure
n. பிளவு, வெடிப்பு, பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்து பிளப்பு, முளைச் சுருக்கங்களிலள்ள நெடும்பள்ளம், முளை இடைச்சந்து, (வினை) பிளவு படுத்து, பிளவுறு.
fissured
a. பிளவுபடுத்தப்பட்ட, பிரிக்கப்பட்ட.
fist
n. குத்துச்சண்டை போடுதற்கேற்றாற்போல் அமைந்த கைமுட்டு, கைமுட்டி, (வினை) கைமுட்டியால் குத்து.
fisticuffs
n. pl. கைக்குத்துச்சண்டை, முட்டிப்போர்.
fistling
n. முதற்பயன், முதல்விளைவு, பருவ முதற்பலன், பருவ முதற் பழங்களின் தொகுதி, முதற்குழந்தை, தலைச்சன், முதலீற்றுக்குட்டி.
fistula
n. புண்புரை, குறுகிய வாயுடைய புரையோடிய புண், திமிங்கிலப் பீற்றுக்குழல், வண்டுவகையின் பற்றுகுழல் உறுப்பு.
fit
-1 n. வலிப்பு, இசிப்பு, நோயின் திடீர்த்தாக்குதல் அலை, வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சிநிலை, சிறிது நேர உணர்விழப்பு, சிறிது நேரச் செயலிழப்பு, சிறிது நேரத்தனிமை, திடீர் உணர்வுநிலை, திடீர் நகையலை, திடீர் எழுச்சியலை, நீடித்திராத மனநிலை, காரணமில்லாத உணர்ச்சிப்போக்கு.
fit-out
n. ஆடையணிமணித் தொகுதி, தளவாடம், கருவிகலத் தொகுதி.
fit-up
n. நாடக அரங்க வகையில் தற்காலிகமான மேடையமைப்பு, எடுத்துச்செல்லக்கூடிய ஒப்பனைக்கருவிகளை உடன்கொண்ட மேடையமைப்பு, ஊர் ஊராகக் கொண்டு செல்லக்கூடிய தற்காலிகச் சிறு திரை ஓவியங்கள்.