English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
first-day
n. ஞாயிறு, வாரத்தின் தலைநாள்.
first-floor
n. கட்டிடத்தின் முதல் மாடி, நிலைத்தளத்துக்கு மேற்பட்ட முதல்மாடித் தளம், அமெரிக்க வழக்கில் நிலத்தளம்.
first-fruits
n. pl. பருவத்தின் முதல்விளைவு, கடவுளுக்கான பருவ முதல்விளைவுப் படையல், முகற்பணி ஊதியம், தொழில் தொடக்க ஆதாயம், முற்காலப் பண்ணை மேலாளர்க்கு அளிக்கப்பட்ட புதுப்பணித் தொடக்கக் காணிக்கை.
first-hand
-1 a. நேரடியான, இடையீடின்றிப் பெறப்பட்ட.
first-night
n. நாடகத்தின் முதலிரவுக் காட்சி.
first-nighter
n. நாடகங்களை முதல்நாளே வழக்கமாகக் காண்பவர்.
first-offesnder
n. முதன்முறைக் குற்றவாளி.
first-rate
-1 n. முதல்தரப் போர்க்கப்பல், (பெ.) முதல்தரமான, உச்ச உயர் வகையான, முதல்தரப் பண்புடைய, உச்ச நிலை நய நேர்த்தியுடைய.
firstaid
n. முதலுதவிச் சிகிச்சை, மருத்துவர் வருவதற்கு முன் காயப்பட்டவருக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவி.
firsthand
-2 adv. நேரடியாக, இடையீடின்றி.
firstly
adv. முதலாவதாக, முதன்முதலாக.
firsts
n. pl. மா-வெண்ணெய் வகைகளில் முதல்தரத்துக்குரிய வகைகள்.
firth
n. கடற்கழி, ஆற்றின் கழிமுகம்.
fisc
n. பண்டைய ரோமநாட்டின் கருவூலம், ரோமப் பேரரசரின் தனிப்பட்ட முறைநிதிச் சேமம்.
fiscal
n. சில நாடுகளில் சட்டத்துறைப் பணியாளர், (பெ.) அரசிறை வரும்படிக்குரிய, நாட்டின் வருமானத்திற்குரிய வகைகள்.
fish
-1 n. மீன், மீன்இறைச்சி, மீனினம், கடல்வாழ் உயர், சூழ்ச்சி வலையில் அகப்படுத்துதற்காக நாடப்பெறும் மனிதர், மீன்வகை, (பே-வ.) பேர்வழி, (வினை) மீன்பிடி, நீருக்கடியில் மேடு, மறைமுக வழிகளில் தேடு, நீரினின்று வெளியே எடு, குளம் குட்டையில் மீன்பிடி, துருவித்தேடு, தூண்டிலிடு, கொக்கியில் பிடித்தெடு, சிறிது சிறிதாக வெளிப்படுத்து, மெல்ல வெளிப்படுத்து, மறைவிடத்தினின்று வெளிக்கொணர்.
fish-carver
n. மீனைத்துண்டிக்க உதவும் கருவி.
fish-fag
n. மீன் விற்பவள், மீன் விலையாட்டி.
fish-glue
n. மீன்பசை, மீன் வகைகளினின்று கிடைக்கிற பசை செய்யவுதவும் வெண்மையான நுங்கு போன்ற பொருள்.
fish-hatchery
n. செயற்கைமுறையில் மீன்வளர்க்கும் நிலையம்.