English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fetlock
n. குதிரைக்காலடிக் குழைச்சு, குதிரைக்காலடி, குதிரைக்குளம்பின் மேல் மயிர்க்குச்சமுள்ள பகுதி.
fetter
n. கால்விலங்கு, தனை, தடை, தடங்கல், (வினை) கால் விலங்குகளாற் பிணை, தடு, தடங்கல் செய்.
fetters
n. pl. சிறைக்கட்டு, விலங்கீடு.
fettle
n. நிலைமை, ஒழுங்கு, முறை, (வினை) ஆயத்தம் செய், ஒழுங்குபடுத்து, ஏற்பாடுபண்ணு, இங்குமங்கும் சுற்றித்திரி.
fetwa
n. (அரா.) இஸ்லாமிய வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு.
feu de joie
n. (பிர.) சிறப்புக் கொண்டாட்டங்களின் போது வணக்க முறையாக முழுக்கப்படும் வேட்டுக்கள்.
feud
-1 n. குடிமரபுப்பகை, வழிவழிப்பகை, ஓயாச் சண்டை சச்சரவு நிலை.
feudal
a. ஊழியமானியத்துக்குரிய, மானிய நிலம் சார்ந்த, நிலப்பண்ணைமுறை சார்ந்த.
feudalism
n. நிலப்பண்ணை உரிமை முறை.
feudality
n. நிலப்பண்ணை முறை, நிலப்பண்ணை முறைக்கோட்பாடு, நிலப்பண்ணை முறையிற் கொள்ளப்பட்ட நிலம்.
feudary, feudatory
பண்ணைநிலக் குடியுரிமையாளர், குடியானவர், (பெ.) பண்ணைக்குடியுரிமையுடைய, கீழ் உரிமைப்பட்ட.
feuilleton
n. (பிர.) புனை கதை-திறனாய்வு-எளிய கட்டுரைகள் முதலியவைகளுக்கெனச் செய்தித்தாள்களின் அடியில் கோடிட்டு ஒதுக்கப்படும் பகுதி.
fever
n. காய்ச்சல், சுரம், வெப்பக் காய்ச்சல் வகை, உணர்ச்சிப் பரபரப்பு, நரம்புத் துடிதுடிப்பு, மனக்கலக்கம், நடுநடுக்கம், கடுங்கவலை, (வினை) காய்ச்சலுக்குட்படுத்து, காய்ச்சலுக்காளாகு.
fever-heat
n. சுரவெப்பம், உடலின் கடுவெப்பு, கடுமையான மனக்கலக்கம்.
fevered
a. காய்ச்சல் கண்டுள்ள, மனக்கொந்தளிப்புடைய.
feverfew
n. முன்னாட்களில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பூண்டு வகை.
feverish
a. காய்ச்சல் குறிகளுள்ள, காய்ச்சலின் அடையாளமான, ஒரு சிறிது சுரமுடைய, மனக்கொந்தளிப்புடைய, அமைதியற்ற, பரபரப்பு மிக்க, அவாப்படபடப்புடைய, ஏங்கித் துடிக்கிற, இடவகையில் காய்ச்சல் பரவியுள்ள, சுரம் பரவத்தக்க.
feverous
a. காய்ச்சல் பரவியுள்ள, சுரம் உண்டாக்கவல்ல, சமநிலையற்ற, திடீர் மாறுபாடுகளைக்கொண்ட.
few
a. குறைவான, சில, பலரல்லாத.