English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
evident
a. தௌிவான, ஐயமற்ற, தௌிவாகத் தெரிகிற, தௌிவாக உணரப்படத்தக்க.
evil
n. கேடு, பொல்லாங்கு, கொடுமை, கேடான பொருள், தீவினை, பழி, பாவம், தீங்கு, ஊறு, (பெ.) கெட்ட, தீங்கான.
evince
v. காட்டு, குறித்துக்காட்டு, பண்புக்கூறு வெளிப்படுத்திக்காட்டு.
evirate
v. விதையடி, ஆண்மைத் திறத்தைப் போக்கு, ஊக்கமழி.
eviscerate
v. குடலை வெளிப்படுத்து, உள்ளுறையகற்று, உயிர்ப்பூக்கமழி, வெறுமையாக்கு.
evoke
v. ஆவிகளை, மந்திரித்து வரவழை, எண்ணங்களை உள்ளத்தின் நினை வாழத்திலிருந்து வெளிவரச்செய், உயர் நீதிமன்றங்களில் முன்னிலைப்பட ஆணை அனுப்பு.
evolution
n. அலர்தல், இதழவிழ்தல், விரிவுறுதல், சுருளவிழ்வு, படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி, நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி, வளியலைத் தொகுதி, வெப்ப அலைத் தொகுதி, உயிர்மலர்ச்சி, உள்ளது சிறத்தல், உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு.
evolutive
a. படிமுறை வளர்ச்சி நோக்கிச் செல்கிற.
evolve
v. அலர்வி, மலர்வுறு, இதழவிழ், படிப்படியாகத்தோற்றுவி, முறையாக வெளிப்படச்செய், படிவளர்ச்சியுறுவி, உருமலர்ச்சியுறுவி, முதிர்வுறுவி, படிப்படியாகத் தோன்று, முறையாக வெளிப்படு, படிவளர்ச்சியுறு, உருமலர்ச்சியுறு, முதிர்வுறு, வெப்பஒளி வகைகளில் அலை அலையாக இயங்குவி, உணரப்பட்டவற்றிலிருந்து வருவி, உய்த்துணரவை, புனைவுருவாக்கு, புனைவுருவாகு.
evulsion
n. வன்பறிப்பு, வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்தல்.
ewe
n. ஆட்டுக்கடாரி, பெண் ஆடு, மிகளம் கொண்டாடப்பட்ட உரிமைப்பொருள்.
ewe-necked
a. குதிரை வகையில் மெல்லிய வளைவான கழுத்தினையுடைய.
ewer
n. சாடி, அகல்வாயினையுடைய நீர்க்குவளை.
ewigkeit
n. (செர்.) மென்காற்று உயர்வெளி, அறியப்படாச்சூழல்.
ex animo
a. (ல.) உள்ளார்ந்த, மனமார்ந்த, உணர்ச்சி நிறைந்த, (வினையடை) உள்ளார, மனமார.
ex cathedra
n. (ல.) அதிகாரபூர்வமான, (வினையடை) மேலாண்மை உரிமையாக, தனி அதிகாரத்துடன்.
ex officio
a. (ல.) பதவிமுறைப்பட்ட, அலுவல் சார்பான, (வினையடை) பதவிமுறையில்.
ex parte
a. (ல.) (சட்.) ஒருதலையான, ஒருபக்கச்சார்பான, (வினையடை) ஒருதலையாக.
ex post facto
a. (ல.) பின்னோக்கிச் சென்ற காலத்தையும் உட்படுத்துகிற.
ex voto
n. தோலுரி, ஓடு களை, சட்டை கழற்று.