English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
errantry
n. வீர அருஞ்செயல் வேட்டம், வீர அருஞ்செயல் நாடிச் சுற்றித்திரியும் நிலை, அருஞ்செயல் வேட்டை வீரர் நடைமுறைப் எங்கு, அருஞ்செயல் தேட்ட வீரர் எண்ணக் கனவுத் தொகுதி.
errata
n.pl. பிழைகள், அச்சுத்தவறுகள், அச்சுப்பிழைத் தொகுப்புப் பட்டியல்.
erroneous
a. பிழைபட்ட, சரியல்லாத, தவறான, பிழைமலிந்த, தப்பெண்ணத்தால் ஏற்பட்ட.
error
n. தவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
ersatz
n. (செர்.) செயற்கைப் பகரப்பொருள், இயற்கைப்பொருளினிடமாகப் பயன்படுத்தத்தக்க செயற்கைக் கூட்டுப் பொருள், (பெ.) பகரச் செயற்கைப் பொருளான.
Erse
n. அயர்லாந்து நாட்டுப் பழைய மொழியுடன் தொடர்புடைய ஸ்காத்லாந்து நாட்டு மேலை மேட்டுநில மக்கள் மொழி, (பெ.) ஸ்காத்லாந்து நாட்டு மேலை மேட்டுநில மக்கள் பேச்சு மொழிக்குரிய.
erstwhile
a. முன்னாட்களுக்குரிய, (வினையடை) முன்னாட்களில்.
erubescent
a. சிவப்பாகின்ற, முகம் சிவக்கின்ற.
eructation
n. உமிழ்தல், எரிமலை வகையில் அனல் கக்குதல்.
erudite
a. புலமை நிரம்பிய, அறிவாழம் வாய்ந்த.
erupt
v. பல் வகையில் ஈற்றினை ஊடுருவி வெளிப்படு, எரிமலை வகையில் வெடித்துக்கிளம்பு, திடீர் வெடிப்புறு.
eruption
n. எரிமலைவெடிப்பு, பொக்குளம், பரு, திடீர்உணர்ச்சியெழுச்சி, திடீர் ஊற்று எழுச்சி, போரின் திடீர்த்தொடக்கம், நோயின் திடீர்த்தோற்றம், திடீர்ச்சிரிப்பு, எதிர்பாராத நிகழ்ச்சி.
eruptive
a. வெடிக்கிற, திடீரென வெடிக்கும் இயல்புடைய, எரிமலை வெடிப்பினால் தோன்றுகிற, எரிமலை வெடிப்பினால் மேலுந்தப்பட்ட, எரிவெடிப்பைச் சார்ந்த.
erysipelas
n. அக்கி, உடல்மீது திண்சிவப்பு நிறம் படரும் நோய் வகை.
erythema
n. தோல் தடிப்பு நோய் வகை, தோலின் மீது பட்டை பட்டையாகத் தடிப்பு விழும் நோய்.
escalade
n. ஏணிமூலம் மதிலேறிக் கடத்தல்.
escalator
n. இயங்கும் படிக்கட்டு.
escallonia
n. தென் அமெரிக்க மலர்ச்செடி வகை.
escallop
n. ஈரிதழ்த் தோடுடைய நத்தைச் சிப்பியனம், சிப்பியோடு, சோழி.