English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ergot
n. காளான் வகையால் ஏற்படும் கூலநோய், மருந்தாகப் பயன்படும் நோயுற்ற கம்புக் கூலவிதை.
ergotism
n. நலிவுற்ற தானியமாவினால் செய்யப்பட்ட ரொட்டியினால் உண்டாகும் நோய்.
ericaceous
a. முட்செடி வகை சார்ந்த, முட்செடிக்குடும்ப வகை சார்ந்த.
Erin
n. அயர்லாந்தின் பழங்காலப்பெயர்.
Erinys
n. கிரேக்கப்புராணப் பழி ஆவித் தெய்வங்களில் ஒன்று.
eristic
n. விவாத இயல், (பெ.) விதண்டாவாதமான மெய்யூன்றாது வாத வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட.
erl-king
n. குழந்தைகளை மயக்கி மாள்வுலகம் கொண்டு செல்லுகிற தாடி பொன் முடியுடைய டியூட்டானிய இனப் பழங்கதைக்குரிய அரக்கன்.
ermine
n. கீரியின உயிர் வகை, நடுவர் பெருமக்கள் அங்கிகளில் பயன்படுத்தப்படும் கீரியின் உயிர்வகையின் மயிர்ப்பட்டு.
erne
n. கழுகு, கடற் கழுகு, வெள்ளைவாலுடைய கழுகினவகை.
Ernie
n. பரிசுரிமையுடைய பங்குமுறிச் சீட்டைத் தேர்ந்து காட்டும் பொறியமைவு.
erode
v. கரம்பு, அரித்துத் தின், படிப்படியாக அழி.
Eros
n. காதல் தெய்வம், காமன், மாரன், வேள்மதன், காதல்.
erosion
n. அரித்துத் தின்னுதல், அரித்தழிப்பு, உள்ளரிப்பு, (மண்.) மழை வெப்பங் குளிர்காற்று முதலிய இயலாற்றல் களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு.
erotic
n. சிற்றின்பப்பாடல், காதற்பாட்டு, (வினை) சிற்றின்பத்துக்குரிய, காமம் சார்ந்த.
erotomania
n. சிற்றின்ப நினைவுகளால் ஏற்படும் மயக்க வெறிச் சோர்வு, காமக்கோட்டி.
err,
v,. வழுவு, தவறுசெய், பிழைபடு, சரிநுட்ப நிலை பிறழ்வுறு, இலக்கத் தவறு, நேர்மை தவறு, பாவம் செய்.
erraatic
a. தவறுகிற, நெறிதிறம்பிய, ஒழுங்கற்ற, ஒழுங்காக இயங்காத, நடை ஒழுங்கற்ற, பழக்கவழக்கங்களில் ஏறுமாறான, கருத்துக் குழப்பமுடைய, நோய்வகையில் உடலில் இடத்துக்கு இடம் மாறிமாறித் தரவுகிற, (மண்.) சூழ்பாறைகளுக்கு அயல் வரவான.
errand
n. தூதுரை, பணிமுறைத் தூதுச் செய்தி, ஏவலர் இடையீட்டுப் போக்குவரவு, பணிமுறைப் போக்குவரவு, பணிமுறைப் போக்குவரவு நோக்கம், பயண நோக்கம், குறிக்கொண்ட செய்தி.
errand-boy
n. பணித்துறைக் குற்றேவஷ்ன், இடையீட்டுப் போக்குவரவுப் பணியாள்.
errant
n. வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிபவர், (பெ.) அலைந்து திரிகிற, வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிகிற, தவறு செய்கிற, நெறிதிறம்பிய.