English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
enjoy
v. துய்த்து மகிழ், மகிழ்வுடன் நுகர், கண்டுமகிழ், கேட்டு மகிழ், உணர்ந்து மகிழ்.
enkindle
v. நெருப்பு அக்ஷ்ண்றெழுவி, போர்கிளர்ந்தெழுவி, உணர்ச்சியைத் தூண்டியெழச்செய், உணர்வு கொளுத்து.
enlace
v. சூழ், சூழ்ந்திறுக்கு, வரிந்து சுற்று, சுற்றிப்பிணை, முறுகு, அணை, தழுவு, சிக்கவை, பின்னு, வலைபடர்வி, பின்னல் வேலைப்பாடு மேவுவி.
enlarge
v. பெரிதாக்கு, பரப்புப் பெரிதாக்கு, அகலப்படுத்து, மனம் விரியச்செய், எண்ணம் விரிவடையச்செய், இதயம் பெரிதாக்கு, அளவுபெருக்கு, தொகை மிகுதியாக்கு, நிழற்படம் விரிவுறுத்து, விரிவுறும் தகுதியுடையதாயிரு, பெரியதாக வளர், விரித்துரை, பாரித்துரை, விரிவாகப் பேசு, சிறைவிடுவி.
Enlarge font
பெரிய எழுத்து
enlargement
n. பெரிதாக்குதல், பெரிதாக்கப் பெறுதல், மிகை, பரப்பீடு, அளவுப்பெருக்கம், உரைப்பெருக்கம், சொற்பரந்துபடல், பெரிதாக்கப்பட்ட நிழற்படம், விடுவிப்பு, (இலக்.) சொற்பொருள் விரிவுத்தொடர், பண்புவிரி.
Enlarger
பெரிதாக்கும் கருவி, விரிக்கி
enlighten
v. ஒளியூட்டு, அறிவுறுத்து, அறிவு கொளுத்து, கற்பி, தெரிவி, ஐயந்தௌிவி, தப்பெண்ணம் அகற்று, மூடநம்பிக்கையிலிருந்து விடுவி.
enlink
v. சேர்ந்து இணை, பொருத்து, கொக்கியால் பிணை.
enlist
v. படையில் சேர்த்திடு, படையில் இடம்பெறு, பட்டியலில் இணைத்துக்கொள், சேர், இணைவுறு, ஆள்சேர், படைக்கு வீரர் திரட்டு, துணையாகப்பெறு, எய்தப்பெறு, பயன்படுத்து, ஈடுபடுத்து, புகுந்தீடுபடு.
enlistment
n. படையில் சேர்த்தல், படையில் சேர்க்கப்படல், படை திரட்டு, ஈடுபடுத்தல், பயன்படுத்தல்.
enliven
v. உணர்ச்சியூட்டு, எழுச்சியூட்டு, ஒளிர்வுடைய தாக்கு, மகிழ்ச்சியுள்ள தாக்கு, படத்துக்கு உயிர்த்துடிப்பூட்டு, உயிர்த்தூண்டுதலளி.
enmesh
v. கண்ணியில் நிக்கவை, வலையில் அகப்பட்டது போலச் சிக்கச்செய்.
enmity
n. பகைவர்நிலை, பகைமை, எதிர்ப்பு, வெறுப்பு, பகை எண்ணம், நட்புக்கேடு.
ennead
n. ஒன்பதன் தொகுதி, ஒன்பது ஏடுகளின் திரள், ஒன்பது செய்திகளின் கோவை, ஒன்பது சொற்பொழிவுகளின் திரட்டு, ஒன்பது புள்ளிகளின் இணைவு.
ennoble
v. உயர்வுபடுத்து, மேம்படுத்து, மேன்மக்கள் நிலைக்கு உயர்த்து, பெருமகார் ஆக்கு, உயர்தரமாக்கு, உயர்தகுதியுடையதாக்கு, உயர்வு தூண்டு, மேம்மையுறச்செய்.
ennui
n. முசிவு, சடைவு, வேலையற்றிருப்பதால், ஏற்படும் மனச்சோர்வு, எதிலும் கருத்தீடுபாடு இல்லாததால் ஏற்படும் கிளர்ச்சிக்கேடு.
ennure
v. பழக்கு, பயிற்று, வழக்கத்தில் கொண்டுவா, இயங்கச் செய்.
enormous
a. மிகப்பெரிய, மாபேரளவுடைய.
enosis
n. கிரீஸ் சைப்ரஸ் இணைப்பு, பிரிட்டனின் ஆட்சியிலிருந்து பிரிந்து சைப்ரஸ்தீவு கிரீஸ் நாட்டுடன் சேரவேண்டுமென்ற கிளர்ச்சிக்குரல்.