English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
elk
n. மரை, காட்டுமான் இனப் பெருவிலங்கு வகை.
elk-hound
n. முரட்டு மயிருள்ள பெரிய வேட்டைநாய் வகை.
ell
n. ஏறத்தாழ 45 அங்குலத்துக்குச் சரியான நீட்டலளவைக் கூறு.
ellilptical
-2 a. (இலக்.) சொல்லெச்சத்துக்குரிய, உய்த்துணரவேண்டிய உறுப்பினையுடைய.
ellipse
-1 n. முட்டை வடிவம், நீள்வட்டம்.
ellipses, n. pl. ellipse(2), ellipsis
என்பவைகளின் பன்மை வடிவம்.
ellipsis
n. (இலக்.) அவாய்நிலை, வாக்கியச் சொல்லெச்சம், கருத்தை முடிப்பதற்கு வேண்டிய சொற்கள் வாக்கியத்தில் அவாய்நிலையாதல்.
ellipsoid
n. ஓரைவட்டக்கட்டி, குறுக்குவெட்டுக்கள் ஓர் ஊடச்சு நெடுக நீள் வட்டமாகவும் மற்ற ஊடச்சு வழி நீள்வட்டமாகவும், வட்டமாகவும் அமைகின்ற பிழம்புரு.
elliptic, elliptical
-1 a. முட்டைவடிவமான, நீள்வட்டமான, ஒரைவட்டத்துக்குரிய.
ellipticity
n. வட்டவடிவத்தினின்றும் அல்லது கோளவடிவத்தினின்றும் வேறாதல், நிலவுலகக்கோளத்தில் நடுவரைப்பகுதி விட்டத்துக்கும் துருவ ஊடுவிட்டத்துக்கும் உள்ள வேறுபாடு.
elm
n. இரட்டை அரம்பப்பல் விளிம்புடைய இலைகளும் சிறு மலர்க்கொத்துக்களும் உள்ள மரவகை, (பெ.) இந்த மரவகைக்குரிய.
elmy
a. இரட்டை அரம்பப்பல் விளிம்புடைய இலைகளும் சிறுமலர்க்கொத்துக்களும் உள்ள மரவகைகள் நிரம்பியுள்ள.
elocution
n. பேச்சுக்கலை, பேசும்பாணி, நாவன்மை, பேச்சுவளம்.
embed
v. சூழ்ந்தணைத்துக்கொள், பதித்துவை, கிடத்து.
embedded
a. பதிக்கப்பெற்ற.
embellish
v. ஒப்பனைசெய், அழகுபடுத்து, நுணுக்க நயமுடையதாக்கு, கற்பனை இணைத்துச் சுவைபெருக்கு.
embellishment
n. அழகுடையதாக்கல், நுண்நய ஒப்பனை, அணி, அணிகலன்.
ember
n. தணல், கங்கு, கணப்பு, கொதி சாம்பல், வெந்தழல் நீறு.
Ember-days
n.pl. நோன்பு வழிபாட்டுக்குரிய கிறித்தவப் பெருநாட்கள்.
ember-goose
n. வடமாகடற்பகுதிக்குரிய பெரிய நீர்மூழ்கிப் புள்வகை.