English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
electrum
n. பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன்வெள்ளிக்கலவை.
electuary
n. தேனுடன் அல்லது இன்குழம்புடன் கலந்த மருந்துத்தூள்.
eleemosynary
a. இரவலர்க்களிப்பது பற்றிய, ஈகையைப் பொறுத்த, உதவிசெய்கிற, இலவசமான, கைம்மாறு கருதாத.
elegance, elegancy
நயநாகரிகம்ம, நேர்த்தி, அழகு, தகவு, செம்மை, பண்புடைமை, சான்றொழுங்கு.
elegant
n. நயநாகரிகர், நாகரிகப்பகட்டாளர், சுவைநயப்பகட்டர், (பெ.) நடையினிய, நடைநயம்வாய்ந்த, நாகரிகத்தோற்றமுடைய, காண்பினிய, சுவைநயம் வாய்ந்த, நுட்பநயமுடைய, நேர்த்தியான, பண்பட்ட நயநாகரிகமுடைய, மதிப்பு நலமார்ந்த, இன்பநலம்வாய்ந்த, ஒழுங்கு நலமுடைய.
elegiac
n. புலம்பற்பாட்டு, (பெ.) புலம்பற்பாட்டுக்குரிய, துயர் தருகிற, நெடில் இணைகுறில் ஆன மூவகைச்சீர் ஆறு அல்லது ஐந்து கொண்ட அடியாலான.
elegiacs
n.pl. புலம்பற்பாட்டுக்கள், நெடில் இணைக்குறில் ஆன மூலகைச்சீர் ஆறு அல்லது ஐந்துகொண்ட யாப்புச் சார்ந்த பாடல்.
elegize
v. கையறு நிலையாக எழுது, துயரமனப்பான்மை காட்டி எழுது, புலம்பற்பாடல் எழுது.
elegy
n. புலம்பற்பாட்டு, கையறுநிலைப்பாடல், சரமகவி, ஆழ்ந்த சிந்தனை அல்லது துயரத்தைக் குறிக்கும் செய்யுள், புலம்பற்பாட்டின் சீர் உடைய செய்யுள்.
element
n. தனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள்.
elemental
n. பூதங்களின் பின்னணித்தெய்வம், இயற்கை யாற்றலின் அதிதேவதை, ஆவித்தெய்வம், (பெ.) நாற்பெரும் பூதங்களுக்குரிய, இயற்கை ஆற்றல்களுக்குரிய, மாபேராற்றல் வாய்ந்த, இயற்கை ஆற்றல்களோடு வைத்து எண்ணத்தக்க, இன்றியமையாயிராத, தனித்த.
elementalism
n. நாற்பெரும் பூதங்களுக்குரிய அதி தேவதைகளின் வழிபாடு.
elementary
a. மூலக்கோட்பாடுகளுக்குரிய, மூலதத்துவமான, அடிப்படையான, ஆதாரமான, தொடக்கமான, (வேதி.) பகுதிகளாகப் பிரிக்கமுடியாத, ஒரே தனிமத்துக்குரிய, கலவையாயிராத, மண்-வளி முதலிய பூதங்களுக்குரிய.
elements
n. pl. நாற்பெரும் பூதங்கள், அடிப்படைக்கல்விக்கூறுகள், அடிப்படைக்கலைக்கூறுகள், திருக்கோயில் இறுதி உணவுத் திருவினைக்குரிய திரு அப்பத் திருத்தேறல் கூறுகள்.
elemi
n. களிம்பு-மெருகெண்ணெய் முதலிய வற்றில் பயன்படுத்தப்படும் நறுமவ்ப்பிசின் வகை.
eliminator
n. பிரித்தகற்றுபவர், அகற்றும்பொருள், மின்னாற்றல் பயன்படுத்தும் கம்பியில்லாத் தந்திக்குரிய கருவிவகை.
elision
n. ஒலிப்பில் உயிரொலி கெடுதல், சொல்லில் அசைகெட்டு மறைதல்.
elite
n. (பிர.) மிகச்சிறந்ததாகத் தெரிந்தெடுக்கப்பட்ட கூறு, இனக்கொழுந்து, உயர்ந்தோர் குழாம்.
elixir
n. அமுதம், உயிர்நீர், இறந்தவர்க்கு உயிர்தரவும் ஏனை, உலோகங்களைப் பொன்னாக மாற்றவும் வல்லதெனக் கருதப்பட்ட மருந்து நீர்மம், உள்ளுயிர்க்கூறு, ஊக்கந்தரும் பொருள், கற்பம், சஞ்சீவி, அருமருந்து, வடிநீர்.
Elizabethan
n. முதலாவது எலிசபெத் அரசியின் காலத்தவர், முதலாவது எலிசபெத் அரசிகாலத்து எழுத்தாளர், (பெ.) முதலாவது எலிசபெத் அரசியின் ஆட்சிக்காலத்துக்குரிய.