English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
distend
v. பரப்பி விரிவுறச்செய், உள்ளிருந்து பருக்கச் செய், நீட்டு, பரப்பு, விரிவுறு, பரப்புறு, வீங்கு.
distensibility
n. விரியும் இயல்பு, நீளும் இயல்பு,
distensible
a. நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய.
distensile
a. நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய, பருக்குமயல்பினைத் தூண்டக்கூடிய.
distension, distention
n. விரிவுறுத்தல், விரித்தல், விரிதல், விரிவு, பெரிதாகும் நிலை, விரியுமியல்பு, விரிவுற்ற நிலை.
distich
n. ஈரடித்தொகுதி, ஈரடிச்செய்யுள், குறளடிப்பா, (தாவ) இருவரிசைகள் கொண்ட, இரு வரிசையாகவுள்ள.
distil
v. வடித்திறக்கு,.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு, சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு, வடிகலததைக் கையாளு, வடித்திறக்கப் பெறு, சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு, சொட்டுச் சொட்டாக விழு, துளி துளியாக வெளியிடு, துளியாகக் கசிந்து வடி, மெல்ல வழிந்தோடு, திவலைகள் கசிந்து பரவவிடு.
distillate
n. வடித்திறக்கப்பட்ட பொருள், வடிநீர்மம்.
distillation
n. வடித்திறக்கல், வாலைவடித்தல், சாராய வகை இறக்குதல்.
distillatory
a. வாலைவடிப்பதற்கான, சாராய வடிப்புக்குரிய.
distiller
n. வடித்திறக்கபவர், சாராயவகை வடிப்பவர்.
Distilleries
துணிவடிமனை, வடிசாலை
distillery
n. வடிசாலை, வடிமனை, சாராயம் வடிக்குமிடம்.
distinct
a. தௌிவாகத் தெரிகிற, எளிதில் விளங்குகிற, நன்கு வரையறைப்பட்ட, தனிவேறுபட்ட, தனித்த, வேறான, இடமற்ற, மயக்கத்துக்கு இடமற்ற, உறுதிப்பாடான.
distinction
n. தனித்தன்மை, வேறுபாட்டுப்பண்பு, தனிச் சிறப்பியல்பு, தனிவேறுபாடு, தனிச்சிறப்பு, தனிமேம்பாடு, தனிமதிப்பு, முனைப்பான தனிச்சிறப்புப்பெயர், சிறப்புப் பட்டம், வேறுபாடு, வேறுபட்டநிலை, பிரிவு, பண்புமாறுபாடு, தனிச்சலுகை, தனி ஒருச்சார்பு.
distinctive
a. வேறுபாட்டைத் தெரிவிக்கிற, தனிமாதிரியான, குறிப்பிடத்தக்க.
distingue
a. மேம்பட்ட தோற்றம்வாய்ந்த, சிறப்புக்குரிய கூறுடைய, மேதக்க நடையுடைய.
distinguishable
a. வேறு பிரித்தறியக்கூடிய.
distinguished
a. புகழ்பெற்ற, சிறந்த, மேன்மைவாய்ந்த.
distinguishing
a. தனிப்பட்ட, வழக்கத்திற்குமாறான, தனிச்சிறப்புடைய.