English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chelsea
n. லண்டன் நகரப்பகுதி.
Cheltonian
n. செல்டன்ஹாம் கல்லுரியினர், (பெ.) செல்டன்ஹாம் கல்லுரிக்குரிய.
chemiatric
a. வேதியியல் மருத்துவஞ்சார்ந்த.
chemic
n. வண்ணக்காரம், நிறம்போக்கி வெண்மையாக்கும் தூள், (வி.) வெண்மையாக்கும் பொடிகலந்த நீர்மங்கொண்டு செயற்பட வை.
chemical
n. வேதியியல் முறையில் பெறப்பட்ட பொருள், வேதியியல் செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் பொருள், (பெ.) வேதியியலுக்குரிய, இயைபியலுக்குரிய, வேதியியல் சார்ந்த, வேதியியலான, வேதியியல் நன்குணர்ந்த, வேதியியல் கற்று வருகிற.
chemically
adv. வேதியியல் கோட்பாடுகளுக்குத் தக, வேதியியல் வல்லுநர் நோக்கின்படி, வேதியியல் செயல் முறையினால்.
Chemicals
வேதுப்பொருள்கள், வேதியப்பொருள்கள்
chemin de fer
n. (பிர.) சூதாட்டச் சீட்டு வகை.
chemise
n. பெண்கள் அணியும் உட்சட்டை.
chemisette
n. உட்கச்சுப் போலிறங்கிய பெண்டிர் கச்சு வகை, சட்டையினால் மூடப்படாத பெண்களின் உட்கழுத்தை அணி செய்யும் பூ வேலை.
chemist
n. வேதியியல் வல்லுநர், மருந்து சரக்குகள் செய்பவர், மருந்து கலந்து கொடுப்பவர், மருந்துக்கடைக்காரர்.
chemistry
n. வேதியியல், பொருளியைபாராயும் நுல் துறை.
chemitype
n. செதுக்கு வேலையினின்றும் படிவங்களைப் பெறுவதற்கான வேதியியல் செயன்முறை.
chemopsychiatry
n. மருந்துமூலம் மனநோய் குணப்படுத்தும் முறை.
chemotaxis
n. (தாவ., வில.) வேதியியல் தூண்டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம்.
chemotherapeutics, chemotherapy
n. (மரு.) நோய் உண்டாக்கும் நுண்மங்களை அழிக்குந் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக்கொண்டு நோய் குணப்படுத்தும் முறை.
chemotropism
n. (தாவ., வில.) வேதித்திருப்பசைவு, வேதியியல் தூண்டுதலுக்கிணங்க வெவ்வேறு அளவில் வளர்வதனால் திசைத்திருப்பம் ஏற்படுதல்.
chemurgy
n. உழவுத் தொழில் மூலப்பொருட்களைத் தொழிலுக்குப் பயன்படுத்துவது பற்றிய செயல்முறை வேதியியல் பிரிவு.
chenille
n. ஆடைகளின் ஓரக்கரை புனையணியாகப் பயன்படும் மென் பட்டிழைக் கச்சை வகை, மென்பட்டு மேசைத் துணி வகை.
chenopodiaceous
a. (தாவ.) அக்காரக் கிழங்குச் செடியினத்துக்குரிய.