English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cynic
n. கலை இன்பச் செல்வங்களைக் கண்டித்து வெறுத்தொதுக்கும்படி போதிந்த ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரத்தில் வாழ்ந்த ஆன்டிஸ்தெனிஸ் (பிறப்பு 444 கி.மு.) என்பார் நிறுவிய கோட்பாட்டுக் குழுவினர்.
cynical
a. நாய்க்குணம் படைத்த, எரிந்து விழுகிற, குற்றம் நாடுகிற, நன்மையை விரும்பி ஏற்காத, நன்மையில் நம்பிக்கையற்ற.
cynicism
n. நலத்தின்கண் நாரின்மை, மனிதப்பண்பு வெறுப்பு, அழுகை வேதாந்தம், வெறுப்பு மனப்பான்மை.
Cynocephalus
n. நாய்த்தலையுடைய புராணத்தை மனிதன், (வில.) நாய் முகமுள்ள பெரிய குரங்கு வகை.
cynophobia
n. நாயினிடத்து அச்சம்.
cynosure
n. வடமீன், வடமீன் உள்ளிட்ட விண்மீன்குழு, வழிகாட்டும் வான்பொருள், கவர்ச்சிக்குரிய மையப்பொருள், வியப்பினிய நடுவிடம்.
cyperaceae
n. (தாவ.) தாள்புல் உள்ளிட்ட வெப்ப மண்டலக் கோரைப்புல் பேரினம்.
cyperaceous
a. (தாவ.) கோரைப்புல் வகைக்குரிய, கோரைப்புல் வகைச் செடிகள் போன்ற.
Cyperus
n. (தாவ.) வெப்பமண்டலக் கோரைப்புல் இனம்.
cypress
-1 n. கெட்டியான கட்டையும் திண்பச்சை இலைகளுமுள்ள குவிந்த காய் மரம், இழவுத்துயர்க் குறியான இம்மரத்தின் கிளை.
Cyprian
n. சைப்ரஸ் தீவில் வாழ்பவர், சைப்ரஸ் நாட்டினர், ஒழுக்கவரம்பற்றவர், காமவெறிபிடித்த பெண், (பெ.) சைப்ரஸ் தீவுக்குரிய, ஒழுக்கவரம்பற்ற, காமவெறி பிடித்த.
Cypriot, Cypriote
சைப்ரஸ் தீவில் வாழ்பவர், சைப்ரஸ் நாட்டினர், (பெ.) சைப்ரஸ் தீவுக்குரிய.
Cyrenaic
n. பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்தைச் சேர்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்வியக்கியலாரின் இன்பக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தவர், (பெ.) பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்துக்குரிய, சைரீன் நகரத்தைச் சார்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்விளக்கியலாரின் இன்பக் கோட்பாட்டுக்குரிய.
Cyrillic
a. ஒன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த தூய திரு.சிரில் அமைத்த கீழைத்திருச்சபைக்குரிய ஸ்லேவானிய நெடுங்கணக்கு வகைக்குரிய.
cyst
n. (உயி.) விலங்குகளில் அல்லது செடிகளில் சுரக்கும் நீர்மம் கொண்டுள்ள உட்குழிவான பை, (மரு.) கெட்ட நீர்-ஒட்டுயிரிகளின் முட்டைப்புழுக்கள் முதலியவை கொண்டுள்ள குடுவை, கரு-முளை முதலியவற்றை உட்கொண்டுள்ள உயிர்மம்.
cystic
a. சிறுநீர்ப்பைக்குரிய, பித்தப்பைக்குரிய, உடலில் உள்ள கழிவுநீர்ப் பைபோன்ற உறுப்பின் இயல்பு வாய்ந்த.
cystocele
n. (மரு.) சிறுநீர்ப்பையின் சரிவு.
cystoscope
n. சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆய்வதற்கான கருவி.
cystotomy
n. சிறுநீர்ப்பைக்குள் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
cystritis
n. (மரு.) சிறுநீர்ப்பை அழற்சி.