English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
compositor
n. அச்சுக்கோப்பவர்.
compossible
a. ஒரே சமயத்தில் ஒருங்கு உடனொத்து இருக்கக்கூடிய, மற்றொன்றோடு உடனிணைவாய் இயலத்தக்க.
compost
n. கலப்பு உரம், இணைப்பு, கலவை, (வி.) கலப்பு உரமிடு, கூட்டு உரம் உண்டுபண்ணு.
composure
n. தன்னிறைவமைதி, சமநிலையமைதி, அமைவடக்கம்.
compot
n. தேம்பாகில் பதனம் செய்யப்பட்ட பழம்.
compotation
n. கூட்டமாக மதுக்குடித்தல்.
compotator
n. குடிகாரத் தோழன்.
Compound
அரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர்
compounder
n. மருந்துகலப்பவர்.
comprador, compradore
n. சீன வணிகருடன் வாணிகம் செய்ய ஐரோப்பிய வாணிகக் கழகங்கள் பயன்படுத்தும் இடையாள், ஐரோப்பிய வாணிகக் கழகங்களின் சீன வேலையாள்.
comprehend
v. மனத்தால் பற்று, தெரிந்துகொள், புரிந்து கொள், அறி, உட்கொள், தன்னகம்படக் கொள்.
comprehensible
a. புரிந்துகொள்ளக்கூடிய, அறிந்து கொள்ளத்தக்க, உட்கொள்ளத்தக்க.
comprehension
n. உணர்வாற்றல், புரிந்துகொள்ளும் திறன், பிறவற்றை அகங்கொண்டியலும் நிலை, இங்கிலாந்து நாட்டுத் திருச்சபையினுள் அதற்குப் புறம்பானவர்களையும் அகங்கொள்ளுதல், சொல்லின் பொருள்கவிவு ஆற்றல், (அள.) பதப்பொருளிலடங்கிய பண்புக் குறிப்புத் தொகுதி.
comprehensive
a. உணர்வாற்றல் சார்ந்த, புரிந்துகொள்ளும் திறனுள்ள, கவியாற்றல் மிக்க, விரிபொருள் அகப்படுத்தவல்ல, அகல் விரிவான, அகல் பெருந்தொகுதியான.
compress
-1 n. உறுப்புகட்கு அழுந்தந்தரப் பயன்படுத்துப்படும் பஞ்சு திணித்த கட்டுத்துணி, வீக்கமடக்கக் கட்டும் நீர் தலையிட்டுப் பொதியப்பட்ட ஈரத்துணி.
compressed
a. சேர்த்து அழுத்தப்பட்ட, நெருக்கமாக அமைக்கப்பட்ட, (உயி.) பக்கவாட்டில் தட்டையாக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட.
compressibility, compressibleness
n. அழுத்தினால் பரும அளவு குறையும் தன்மை, பரும அளவுக்கு அழுத்த எடையின் அழுத்த வீழ்ம்.
compressible
a. அழுத்தக்கூடிய, சுருக்கக்கூடிய.
compression
n. அழுத்துதல், அழுத்தம், அழுத்தப்படும் நிலை, அமுக்கம், அடர்த்தி, நெருக்கம், சுருக்கம், அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவு, தட்டையாதல், உள்வெப்பாலையில் வளி அமுக்கும் இயக்கம்.
compressive
a. அழுத்தக்கூடிய, அடர்த்தியாக்குகிற, நெருக்கித் தட்டையாக்கக்கூடிய.