English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
calorie
n. வெப்ப அளவைக் கூறுகனலி, கலோரி.
calorific
a. சூடு உண்டுபண்ணுகிற, சூடாக்குகிற, (தொ.)உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு.
calorification
n. சூடு உண்டுபண்ணுதல், உயிர்வெம்மை, உயிரினத்தின் உடலில் உண்டாக்கப்படும் வெப்பம்.
calorimeter
n. கனல்மானி, சூட்டின் அளவு காட்டும் கருவி.
calorist
n. சூட்டின் இயல்பு நுண்ணிய நீர்மம் என்ற முற்பட்ட காலக் கொள்கையை உடையவர்.
calotte
n. ரோமன் கத்தோலிக்கக் குருமார் அணியும் கபாலத் தொப்பி.
calotype
n. பழங்கால நிழற்பட முறை.
caloyer
n. கிரேக்கத் துறவி மடத்தினர்.
calp
n. அயர்லாந்தில் காணப்படும் கரும்பழுப்புநிறச் சுண்ணாம்புக்கல்.
caltrop
n. கப்பணம், குதிரைப்படைகளை முடமாக்கும் நோக்கத்துடன் தரையில் எறியப்படும் நான்கு கூருள்ள இரும்புப்பந்து, விண்மீண் உரு முட்செடி வகை, விண்மீண் உருவக் கடற்பாசி, விண்மீண் வடிவக் காயுடைய செடி.
calumet
n. நட்பிணக்க அறிகுறியாக அமெரிக்கச் செவ்விந்தியர் வழங்கும் புகைக்குழாய், அமைதிச் சின்னம்.
calumniate
v. பழி, இழித்துக்கூறு, பொற்குற்றம் கற்பி, பொய்ச் செய்திகளைப் பரப்பு.
calumniator
n. தூறு பேசுபவர்.
calumniatory, calumnious
a. இழித்துக்கூறும் இயல்புடைய, தூறுகூறும் பாங்கான.
calumnoation
n. இழிப்புரை, பழித்துக் கூறுதல்.
calumny
n. எற்றியுரைத்தல், பொய்க்குற்றச்சாட்டு, அவதூறு.
Calvary
n. இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்த இடம், சிலுவைக் காட்சி ஓவியம், (தொ.) மூன்று படிகளையுடைய பீடத்திலமைக்கப்பெற்ற சிலுவை.
calve
v. கன்றீனு, பெற்றெடு, பனிப்பாறை வகையில் பனிக்கட்டியை நெகிழ்வித்துத் தள்ளு.
calved
a. பின்னங்கால் கெண்டைச் சதையுடைய, கெண்டைப் பகுதியுடைய.