English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
chested
a. பெட்டியையுடைய, பேழையில் வைக்கப்பட்ட.
chesterfield
n. நீண்ட புறமேற்சட்டை, மெத்தென்ற பொருள்கள் நிரம்பத் திணிக்கப்பெற்ற அப்ல் சாய்விருக்கை.
chestful
n. பெட்டி நிரப்புவதற்குப் போதிய அளவு.
chestnut
n. மரவகையின் தவிட்டு நிறக்கொட்டை, தவிட்டு நிறக்கொட்டையுடைய மரவகை, மரவகையின் கட்டை, சுவையற்ற நொடிக்ககதை, செந்தவிட்டு நிறம், செக்கர் நிறக்குதிரை, குதிரைக்கால் புடைப்பு, (பெ.) செக்கர் நிறமான, செந்தவிட்டு நிறமான.
chesty
a. மிக மெல்லிய குரலில் பேசும் இயல்புடைய, தாழ்வாகப் பாடும் இயல்புடைய, (பே-வ.) மார்பு நோய் வந்துள்ளதாகத் தெரிகிற.
cheval-glass
n. செங்குத்தாய் நிற்கும் சட்டங்களில் தங்கி ஊசலாடும் உயரமான நிலைக்கண்ணாடி.
chevalier
n. குதிரை வீரன், வீரத்திருத்தகை, நாகரிகப் பாங்குள்ளவர், பெண்டிரிடம் மென்னயப் பாங்குடன் பழகும் திறமுடையவர்.
chevalier dindustrie
n. பணவேட்டையாடுபவன், எத்தன், மோசக்காரன்.
chevaux de frise
n. pl. (பிர.) குதிரைப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான முள்வேலி அரண் வரிசை, முள் வேலி, செடிகளின் இழைவரைக் காப்பு, உயிர்களின் மயிர்க் காப்பு வரை.
chevelure
n. பொய்மயிர்க் குல்லாய், மயிர்த்தலை, தலைமயிர், (வான்.) வான்மீன் ஒளிக்கற்றை.
cheverel
n. ஆட்டுக்குட்டி, மென்மைப்பதமான குட்டி ஆட்டுத்தோல், (பெ.) குட்டி ஆட்டுத் தோல் போன்ற, நெகிழ்வுடைய.
chevet
n. திருக்கோயில் ஒதுக்கிடம், திருக்கோயில் ஒதுக்கிடங்களின் தொகுதி.
cheviot
n. செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் குறுமயிருடைய உறுதியான உடலமைப்பு வாய்ந்த ஆட்டு வகை, ஆட்டுவகையின் கம்பளம், கம்பள ஆடை வகை, (பெ.) செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் ஆட்டுவகையிலிருந்து கிடைத்த, ஆட்டு வகையின் கம்பளத்தினால் செய்யப்பட்ட.
chevisance
n. சாதனை, செய்து முடித்த காரியம், மூலவளம், ஆதாயம், பணக் கொடுக்கல் வாங்கல்.
chevron
n. உத்திரம், கைம்மரம், (க-க.) வீட்டின் இரண்டு கைம்மரங்கள் உச்சியில் ஒன்று கூடுவதாகக் காட்டும் சின்னம், படைத்துறையில் நீண்டகாலப் பணியையும் நன்னடத்தையும் காட்டுவதற்காகச் சீட்டைக் கையின்மேல் பொறிக்கப்படும் கம்பு வடிவச் சின்னம்.
chevroned
a. இடம் வலமாக அல்லது மேலும் கீழுமாக வளைந்து செல்லும் அமைப்புடைய.
chevrony
a. கம்பு வடிவச் சின்னங்களால் ஆன, சமனெண்ணிக்கையான கம்புச் சின்னங்கள் பக்கத்துக்குப் பக்கமாக நிறைந்த, கோணல்மாணலான.
chevrotain, chevrotin
சிறு கத்தூரிமான்.
chevy
n. வேட்டைக்குரல், பின்தொடர்ந்து வேட்டையாடுதல், பிடி விளையாட்டு வகை, (வி.) துரத்திச் செல், வேட்டையாடு, தொல்லைப்படுத்து, தப்பி ஓடு.
chew
n. சவைப்பு, பல்லரைப்பு, அதுக்கும் அளவு, புகையிலையின் மெல்லும் அளவான துண்டு, (வி.) பல்லால் அரை, சவை, கடித்து அதுக்கு, புகையிலை மெல்லு, ஆழ்ந்து நினை, சென்றது நினை, நினைந்து நினைந்து சிந்தனைசெய்.