English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bedtick
n. பஞ்சடைப்பதற்குரிய படுக்கை உறை.
bedtime
n. படுக்கும் வேளை, துயில் கொள்ளும் நேரம்.
beduck
v. நீருக்குள் அமிழ்த்து.
bedung
v. ஏருவிடு, சாணம் பூசி அழுக்காக்கு.
bedwarf
v. குள்ளமாக்கு, குட்டையாக்கு.
bedwasrd, bedwards
படுக்கை இருக்கும் திசையில், படுக்கைநேரம் நோக்கி.
bedye
v. சாயமிடு, கறைப்படுத்து.
bee
n. தேனீ, சுரும்பு, தும்பி, வண்டு, வண்டுபோன்ற பூச்சி வகை, கவிஞர், சொடியர், சுறுசுறுப்பாக வேலை செய்பவர், கூடியுழைப்பவர்.
bee-bread
n. மலர்த்துகள், வண்டுணா.
bee-eater
n. பஞ்சு விட்டான், தேனீ போன்ற பூச்சிகளைத் தின்னும் பறவை வகை.'
bee-flower
n. தேனீக்களால் மலர்த்துகள் கொண்டுவந்து பொலிவூட்டப்படும் மலர்.
bee-gluee
n. தேனீப்பசை, தேனீக்கள் மரங்களினின்றும் தரட்டி ஒட்டுப்பொருளாகவும் மெருகுநெய்யாகவும் பயன்படுத்தும் பொருள்.
bee-kite
n. தேனீ-குளவி முதலியனவற்றைத் தின்னும் வல்லுறு போன்ற பெரிய வேட்டைப்பறவை.
bee-master
n. தேனீ வளர்ப்பவர்.
bee-moth
n. இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப் பூச்சிவகை.
Bee-orchis
தேனீ வடிவமைந்த மலருடை செடிவகை.
bee-skep
n. வைக்கோலால் ஆன தேனீக்களின் கூடு.
beech
n. (தா.வ) புங்கமரம், புங்கமரக்கட்டை.