English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bridge-head
n. எதிரியின் நாட்டிற்குள் செல்லக்கூடிய குறுகிய வழி, எல்லையாய் அமைந்துள்ள ஆற்றின் குறுக்கேயுள்ள பாலம்.
bridgeboard
n. ஏணிப்படிகளில் படிப்பலகைகளை ஏற்றி இணைக்கும் செங்குத்தான பலகை.
bridgeless
a. பாலம் அற்ற.
bridle
n. கடிவாளம், தடை, செறுப்பு, தலையைச் சொடுக்கியிழுத்தல், (கப்.) நங்கூரவடம், தளைக்கம்பி வடம், (உட.) உறுப்பியக்கம் தடுக்கும் தசைநார், (வினை) கடிவாளமிடு, பிடித்திழு, அடக்கு, அடக்கிச்செல், எதிர்ப்பைத்தெரிவி, முறைப்புக் காட்டு.
bridle-bridge
n. குதிரைக்காரர்களுக்காக அமைந்த வண்டி செல்லாத பாலம்.
bridle-hand
n. குதிரைக்காகரர்களுக்காக அமைந்த வண்டி செல்லாத பாலம்.
bridle-path
n. இடதுகை, குதிரையில் இவர்ந்து செல்லும் போது கடிவாளத்தைப் பிடித்திழுக்கும் கை.
bridle-rein
n. கடிவாளத்தின் வார்.
bridler
n. கடிவாளம் இடுவோர், அடக்குவோர்.
bridoon
n. படைத்துறை ஈரிணைக் கடிவாளத்தின் மெல்லிணை.
Brie
n. வெண்ணெய் நீக்கப்படாத பாலேடு.
brief
n. வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு, வழக்குரைஞரின் பணி, சிறுபணி, போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை, தாள் வடிவளவு, கையச்சுப்பொறி வீச்சளவு, வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை, (பெ.) சுருக்கமான, சுருங்கிய காலக்கூறுடைய, செறிவான, (வினை)சுருங்கிக் குறிப்பிடு, சுருக்கிக் குறிப்பெடு, சுருக்க விவரத்தின் மூலம் அறிவி, வழக்காட அமர்த்திக்கொள், வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
brief-bag
n. சிறு தோற்பை.
briefless
a. கட்சிக்காரர் இல்லாத, வேலையற்ற.
briefly
adv. சுருக்கமாக, குறிப்பாக.
briefs
pl. (பே.வ.) பெண்டிர் குறுங்காற்சட்டை.
brier
n. காட்டுரோசா உட்பட்ட முட்செடிவகை, புகைக் குழாய் செய்யப்பயன்படும் வேரையுடைய வெண்புதர்ச்செடி, இவ்வேரால்செய்யப்பட்ட புகைக்குழாய்.
brier-root, brier-wood
n. புகைக்குழாய் செய்ய உதவும் வேர்கை.
briered
a. முட்செறிந்த, முள் நிறைந்த.