English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
breezily
adv. காற்றோட்டத்தில், உற்சாகமுடன்.
breeziness
n. காற்றோட்டம், மகிழ்ச்சி, உற்சாகம்.
breezy
a. காற்றலையின் வீச்சுப்போன்ற, காற்றோட்டமான, எழுச்சியுள்ள, ஒள்ளிய, களிப்புமிக்க.
bregma
n. மண்டை ஒட்டின் முன்னிணை விலாப்பகுதி எலும்பு.
bregmatic
a. மண்டைஒட்டின் முன்னிணை விலாப்பகுதி எலும்பு, பற்றிய.
brelogue
n. கடிகாரச்சங்கிலியோடு இணைக்கப்பட்டுள்ள அணிவகை.
Bren carrier
n. துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத ஊர்தி.
Bren-gun
n. பளு இல்லாத பொறிததுப்பாக்கி.
brent-goose
n. கார்காலத்தில் இங்கிலாந்துக்கு வரும் சிறு காட்டுவாத்து இனம்.
brethren
n.pl. உடன்பிறப்புரிமையாளர்கள், தோழர்கள்.
Breton
n. பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணப்பழங்குடியினர், பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்களின் மொழி, (பெ.) பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணத்துக்குரிய, பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்கள் மொழிசார்ந்த.
Bretwalda
n. முற்கால பிரிட்டனின் அரசர்கள் தம் மேலாட்சியுரிமை தோன்ற மேற்கொண்ட பட்டம்.
breve
n. போப்பாண்டவரின் முடங்கல், வளைபிறைக்கோடு, யாப்பியலில் குற்றசைக் குறியீடு, (இசை) பழங்கால மாத்திரை அளவை.
brevet
n. படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம், நன்மதிப்புப் பதவி, (வினை) ஊதியமற்ற உயர்நிலை அளி, மதிப்பியல்பான உயர்வுகொடு.
breviary
n. ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் நாடோறும் ஓதும் திருமுறை நுல்.
breviate
n. சிறுபொழிப்பு, சிறுசுருக்கம், வழக்குரைஞருக்குரிய வழக்காளியின் வழக்குறிப்பு.
brevier
n. அச்சுருப்படிவ அளவு.
brevity
n. சுருக்கம், செறிவு, காலத்தின் குறுகிய அளவு.
brew
n. வடிப்பு, வடித்திறக்குதல், ஒருதடவை வடிப்பளவு, வடியத்தின் பண்பு, வடிப்புத்தரம், வடிப்புமுறை, வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி, காய்ச்சு, மது இறக்கு, கலக்கு, கலந்து உருவாக்கு, இட்டுக்கட்டி உண்டுபண்ணு, உள்ளீடாகச் சதிசெய், வடிப்பில் உருவாகு, கலந்து உருவாகு, உள்ளுறவிளை,
brewage
n. வடித்திறக்குதல், வடிக்கப்பட்ட சரக்கு, வடித்துக் கலக்கப்பட்ட குடிவகை.