English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Balkan
a. ஏட்ரியாடிக்-ஈஜியன் கருங்கடல்களாற் சூழப்பட்ட தீவக்குறையைச் சார்ந்த, ஏட்ரியாடிக் ஈஜியன் முதலிய மக்களைச் சார்ந்த.
Balkanize
v. நாட்டை ஒன்றுடனொன்று சச்சரவிடும் பல சிறு அரசுகளாகப் பிரி.
balker
n. பின்வாங்குபவர், தடைப்படுத்துகிறவர், இடர்செய்பவர்.
balking
n. பின்வாங்குதல், ஏமாற்றம், (வனை) இடர்செய்கிற.
balky
a. இடர்ப்படுத்தும் இயல்புடைய.
ball
-1 n. பந்து, பந்தெறிதல், பந்தாட்டம், குண்டு, துப்பாக்கி அல்லது பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளை,கோளகை, உருண்டை வடிவான ஒன்று, வானின் ஒளிக்கோளம், கண்விழி, உடலின் திரளையான பகுதி, உருண்டையான நுற்கண்டு, கயிற்றுச் சுருள் உருளை, குதிரைக்குரிய கவளம் (வினை)பந்தாக வரிந்து சுற்று, பந்துருவாமக்கு, உருண்டையாகத் திரட்டு, உருண்டையாகத் திரள், செறு, தடு, தடைபடு, சிக்கவை, திரண்டு மொய்.
ball and socket
பந்துக்கிண்ண மூட்டு,
ball-bearings,
n, pl. சுழலும் அச்சு உருளையமைப்பு, உராய்வு படாமல் தடுக்க உதவும் எஃகினாலான நுண்ணிய உருள் குண்டுகள்.
ball-point
n. ஊற்றுப்பேனாவில் மை ஒழுங்குபடுத்தும் உருள் குழைமுனை.
ballad
n. நாட்டுப்பாடல், மக்கள் பாட்டு, கதைப்பாடல், நடனப்பாட்டு.
ballad concert
நாட்டுப் பாடலிசையரங்கு
ballad opera
நாட்டுப் பாடலிசை நாடகம்.
ballad-monger
n. நாட்டுப்பாடல் விற்பனை செய்பவர்.
ballade
n. தாழிசை வண்ணப்பாவகை, மூன்றடுக்கி அல்லது மும்மூன்றாக ஒருவரி மிகும் ஏழு அல்லது எட்டடிப் பாவகை, எழு அல்லது எட்டடிப் பாக்களாலான கவிதை,
ballade royal
பத்து அசை கொண்ட ஏழு அல்லது எட்டடிப் பாவகை.
balladist
n. நாட்டுப்பாடல் இயற்றுபவர், பாணர், பாடகர்
balladry
n. நாட்டுப்பாடல் தொகுதி, நாட்டுப்பாடல் கலை.
ballast
n. கப்பல் எடைப்பாரம், அடிச்சுமை, சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு, உறுதிப்பொருள், உறுதிப்பண்பு, (வினை) அடிச்சுமை ஏற்று, நிலைப்படுத்தச்செய், நிலைப்படும்படி செய்.
ballast-heaver
n. அடிச்சுமை இழுக்கும் பொறி.
ballerina
n. (இத்) ஆடல்நங்கை, கூட்டு நடனப் பெண்.