English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
balbriggan
n. பஞ்சுத்துணுயால் ஆன உட்சட்டை.
balbutient
a. திக்கிப்பேசுகின்ற.
balconette
n. சிறு மாடிமுப்ப்பு, மச்சுவீட்டின் முன்முகப்பு திரைப்படக் கொட்டகை அல்லது நாடக அரங்கின் மாடியிருக்கை வரிசை.
bald
a. வழுக்கைத் தலையான, மொட்டையான, மயிரற்ற ஒன்றும் வளராத, மரமற்ற, இலையற்ற, கொம்புக்கவடற்ற வெறுமையான,அணிமணியில்லாத, சலிப்பூட்டுகிற, சிறப்பற்ற, ஒளிவு மறைவில்லாத, வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
bald-coot
n. வெண்ணிற நெற்றியுள்ள பறவை, வழுக்கைத்தலையர்.
baldachin, baldaquin
இழை தூக்கியமைத்த தையல் வகை, அரசிருக்கை முதலியவற்றின் மீதுள்ள மேற்கட்டி.
balderdash
n. பயனில் சொல், சொற்கதம்பம், இழிமொழி, கீழ்த்தர எழுத்து நடை.
baldhead
n. வழுக்கைத் தலையுடையவர், மாடப்புறா, வாத்து வகை.
baldly
adv. மொட்டையாக, அணி ஒப்பனையின்றி, வக்கணையில்லாமல், முழுதும் வெளிப்படையாக, ஒளிவுமறைவின்றி.
baldmoney
n. குடைவடிவான மஞ்சள்நிறப் பூக்கொத்துக் களையுடைய செடிவகை.
baldness
n. மொட்டைத்தன்மை, வெறுமை, வெளிப்படைப்பண்பு.
baldpate
n. வழுக்கைத்தலையர், வாத்து வகை.
baldric, baldrick
வாள் -கொம்பு முதலியவற்றைத் தொங்கவிடப் பயன்படும் தோள்வார்.
bale
-1 n. கேடு, தீங்கு, அழிவு, துன்பம், அஞர்,நோவு.
baleen
n. திமிங்கில எழும்பு, திமிங்கிலங்கள் சிலவற்றின் மேல்வாயிலிருந்து வளரும் கொம்புபோன்ற தகட்டெலும்பு.
balefire
n. திறந்தவெளிப் பெருநெருப்பு, ஈமத்தீ, குன்றின் மேலிட்ட விளக்கு, சொக்கப்பனை, வாணவேடிக்கை.
baleful
a. துயரம் தரத்தக்க, துன்பம் விளைவிக்கிற, தீங்கான, தீமைதருகிற, துயரார்ந்த.
balistics
n. எறிபடைத்துறை, எறிபொறியியல்.
balk
n. உழாத வரப்பு, விடுபட்ட ஒன்று, தடை, முட்டுக்கட்டை நிலை,ஏக்கம், மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி, சதுர மரமவிட்டம், வீட்டு மேல் தூல விட்டம், மீன் வலையின் இணைப்புக்கயிறு,(வினை) தவறவிடு, கடமை நழுவவிடு, பின்வாங்கு, தடைப்படுத்து, மறைமுகத்தடை செய், இடர்செய், ஏமாற்றமளி, ஊக்கம் கெடு, திடுக்கிடச் செய், தடையிட்டு நில், செயல் விலக்கியிரு, தவிர்த்திரு.
balk-line
n. மேசைக்கோற் பந்தாட்ட மேடையின் குறுக்குக்கோடு, குதித்துத் தாண்டும் போட்டியில் முன்னோட்ட வரம்புகோடு.