English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bailee
n. குறிப்பிட்ட நோக்குடன் சரக்குகள் ஒப்படைக்கப்பட்டவர்.
bailer
-1 n. வானுர்திக்குடை மிதவையால் கீழிறங்குபவர்.
Bailey
n. கோட்டை வெளிச்சுவர், உட்பாதுகாப்புச் சுற்றோட்டம், இடைவெளி முற்றம்,
Bailey bridge
n. அவசரத் தேவையை முன்னிட்டு முன்னரே உருவான பால அமைப்பு.
bailie
n. ஸ்காத்லாந்தின் நகரவைப் பணி முதல்வர்.
bailiff
n. அரசரின் மாவட்டப் பகராள், மாநகர் மணியக்காரரின் முதல்வர், நிலக்கிழாருடைய மேலாள்.
bailiwick
n. மாநகர் மணியக்காரரின் ஆட்சி எல்லை, ஆட்சி எல்லை.
bailment
n. நம்பிக்கையின்மீது சரக்குகள் ஒப்படைப்பு, கைதிகளைப் பிணையத்தின்மீது விடுவித்தல்.
bailor
n. குறிப்பிட்ட செயலுக்காக ஒருவரிடம் சரக்குகளை ஒப்படைப்பவர்.
bailout
வானுர்திக் குடை மிதவையால் கீழிறங்கு.
bain-maire
n. (பிர) வதக்குத் தட்டுகளை வெதுவெதுப்பாக்கும் சுடுநீர்க்கலம்.
bairam
n. (துரு) முஸ்லிம் திருவிழா.
bait
n. தூண்டில் இரை, அவாவூட்டும் பொருள், கவர்ச்சிப் இடைத்தங்கல், (வினை) தூண்டில் இரை வை, உணவுத் துணுக்கிட்டுமருட்டு, அவாவூட்டு, கவர்ச்சிசெய்து மருட்டு, இடைத்தங்கல் உணவளி, இடைத்தங்கல் உணவுகொள், உணவுக்காக இடைவழியில் தங்கு, வழிமனையில் தங்கு, தீனிகொடு, தனீகொள், வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு, ஏவிவிட்டுத் தொந்தரவு செய்
baize
n. முரட்டுக் கம்பளி விரிப்பு.
bake
v. வானவில் வேகவைத்துச் சுடு, வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு, வாட்டி முறுமுறுப்பாக்கு, சூட்டினால் கெட்டியாக்கு, வறட்டு, பழுக்கவை, செந்நிறமாக்கு, வறட்டப்பத் தொழில் செய்
bakehouse
n. வறட்டப்பம் சுரம் இடம், அப்பமனை, அப்பக் கிடங்கு.
bakelite
n. செயற்க குழை பொருட்சரக்கு.
bakemeat
n. அப்பமாவு, அப்பச்சுருணை.
baker
n. வறட்டப்பம் சுடுபவர்.