English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
angelhood
n. திப்பியம், தேவதூதரின் இயல்பு.
angelic
a. தேவதூதருக்குரிய, தேவதைகளுக்குரிய, தேவதைபோன்ற, திப்பியமான.
angelolatry
n. தேவதை வழிபாடு, திப்பிய வணக்கமுறை.
angelology
n. தேவதூதர் பற்றிய கோட்பாடு.
angelophany
n. மனிதர்முன் தேவதூதர் வெளிப்படத்தோன்றுதல், தேவதை பிரத்தியட்சம்.
angelus
n. கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல், ரோமன், கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
anger
n. கோபம், கடுஞ்சினம், சீற்றம், எரிச்சல், கடுவெறுப்பு,(வினை) கோபமூட்டு, எரிச்சலுண்டாக்கு.
angico
n. தென் அமெரிக்கப் பிசின் மரவகை, அம்மரப்பிசின்.
angina
n. தொண்டை வீக்கம்.
AngIo-Israelite
n. அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
angiocarpous
a. உறையினுள் காயுடைய, சிதல் தளத்தை உறையினுள் கொண்ட.
angioma
n. குருதிக்கட்டி.
angiosperm
n. மூடுவிதைச் செடியினம்.
angle
-1 n. மூலை, வடிவின் புறமுனைப்பு, கூம்பு, சாய்வு, நோக்கின் சாய்வு,(கண்.) கோணம், முடக்கு, சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு, இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு, தளச்சாய்வளவு.
angle-worm
n. தூண்டிற்புழு.
Angle,
n.pl ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர், 'ஆங்கிள்' மரபினர்.
angler
n. தூண்டிலிட்டு மீன் பிடிப்பவர், மீன் நாடித்தூண்டிலுடன் திரிபவர்.
anglewise
adv. கோணமாக உடைய.
Anglian
n. ஆங்கலேயர் முன்னோர் உட்பட்ட செர்மானிய இனத்தவர், 'ஆங்கிள்' மரபினர்,'ஆங்கிள்' மரபுக்குரிய கிளைமொழி, 'ஆங்கிள்' மரபின் பேச்சு வழக்கு. (பெ.) 'ஆங்கிள்' மரபுக்குரிய.