English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
assignable
a. வகுத்தளிக்கப்படக்கூடிய, காரணமாகக் குறிப்பிடத்தக்க, ஒதுக்கிக்தரத்தக்க.
assignat
n. பிரெஞ்சுப்புரட்சி அரசாங்கம் (1ஹ்க்ஷ்ஹீ) வெளியிட்ட தாள்நாணயம்.
assignation
n. குறியிடம், (சட்.) உடைமையின் உரிமைமாற்றி வழங்குதல்.
assignee
n. ஆட்பேர், ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர், நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள், சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர்.
assignment
n. வகுத்தமைத்தல், வகுத்தொதுக்குதல், வகுப்பீடு, ஒப்படைப்பு, ஒப்படைத்த பகுதி, ஈடு, காரணக்குறிப்பீடு, உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம்.
assimilability
n. ஒருநிலைப்படும் இயல்பு, செமிக்குந்திறன்.
assimilable
a. ஒன்றுபட்டிணையும் இயல்புடைய.
assimilate
v. தன்னியலாக்கு, தன்னோடிணைவி, செமிக்கவை, ஒன்றுபட்டிணை.
assimilation
n. செமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு.
assimilative
a. செமித்தல் சார்ந்த.
assimilator
n. ஒன்றுபடுத்தி இணைப்பவர், இசைப்பவர், செமிதிறமுடைய பொருள்.
assist
n. தளக்கட்டுப் பந்தாட்டத்தில் உதவியாளர் கெலிப்புக்கூறு, (வினை.) உதவு, துணைசெய், கைக்கொடு, பங்குகொள்.
assistance
n. துணைமை, உதவி.
assize
n. விலைக்கட்டுப்பாடு, அளவை வரையரை, ஆணையாளர் விசாரணை முடிபு, மாவட்ட ஆணையாளர் மன்றம்,(வினை.) விலை கட்டுப்படுத்து, அளவு வரையறை செய்.
assizer
n. அளவைக் கட்டுப்பாட்டாளர்.
associable
a. இணைத்து எண்ணத்தக்க.
associate
n. கூட்டாளி, பங்காளி, துணைவர், தோழர், உடனுழைப்பாளர், துணைமையாளர், நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர், தொடர்புடைய பொருள், (பெ.) இணைவான, தொடர்புடைய, உடனுழைக்கிற, துணைநிலையுடைய, (வினை.) சேர்ந்துபழகு, கூடு, இணைத்தெண்ணு, பங்குகொள்.
Associates
கூட்டாளி, பங்காளி, துணைமையர், இணைவோர்