English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
anticholor
n. 'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள்.
antichrist
n. எதிர் இயேசு, இயேசுவின் எதிரி, எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு.
antichristian
a. எதிர் இயேசுவுக்குரிய, கிறித்தவ சமயத்துக்கு எதிரான.
antichristianism
n. எதிர் இயேசுவின் ஆட்சி, எதிர் இயேசுவின் முறைமை அல்லது கோட்பாடு, கிறித்தவ சமய எதிர்ப்பு.
Antichthon
n. பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம், நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
antichthones
n.pl. நிலவுலகக் கோளகையின் நேர் எதிர் பாதியிலிருப்பவர், நேர் அகட்டு நிலையினர்.
anticipant
n. எதிர்நோக்குபவர், (பெ.) எதிர்நோக்குகிற.
anticipate
v. எதிர்பார், எதிர்நோக்கு, அவாவு, முன்கூட்டி நிகழ்த்து, முன்னதாகவே அமை, காலத்தை முற்படக்குறி, முற்படு, முன்நிகழ், முந்து, முந்திக்கொள், முந்துறக்குறி, அவசரப்படு, விரைவுபடுத்து, முன்னறி, முன்னரே உறுதிக்கொள், முன்னேற்பாடாயிரு, முன்கருதலாயிரு, முன்கருது.
anticipation
n. எதிர்பார்த்தல், கால முன்னிடைவு, முன்னறிவு, முன்செயல், முன்நிகழ்வு, முன்கருதுதல், முன்கருத்து, முன்னுணர்வு, முற்பாவனை, முன்சுவை, முன்முகம், (இசை.) பின் வரவெதிர் நோக்கிய முன்னீடு.
anticipative
a. எதிர்பார்க்கும் இயல்புடைய.
anticipator
n. எதிர்நோக்குபவர்.
anticipatory
a. எதிர்பார்க்கும் இயல்புடைய, எதிர்பார்க்கப்பட்ட, முன்னீடான.
anticivic
a. குடியுரிமைக்கெதிரான.
anticlerical
n. திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர், (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான, திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
anticlimactic
a. உச்ச நிலைக்கு எதிரான, சுவையிறக்கமான.
anticlimax
n. உயர்ந்தேறியிழிதல், சுவையிறக்கம், உணர்ச்சி நிலையில் வீழ்ச்சி.
anticlinal
n. (மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான, இருபுறச் சாய்வுடைய, (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள, (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
anticline
n. (மண்.) நில அரக்கின் வளைமடிப்பு, மேல்வளைவு.
anticlinorium
n. (மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு, மேல்வளைவுத்தொகுதி.
antics
n.pl. கேலிக்குரிய கற்பனைவினை, சிறுகுறும்பு, ஆட்டபாட்டம்