Word |
English & Tamil Meaning |
---|---|
கற்றலைக்கெண்டை | kaṟṟalai-k-keṇṭai n. prob. id. + தலை +. A river-fish, silvery, attaining 1 ft. in length, Sciaena coitor ; ஆற்றுமீன்வகை. |
கற்றவன் | kaṟṟavaṉ n. <>கல்-. 1. A man of erudition, scholar ; கற்றறிந்தவன். 2. Learned sage ; |
கற்றளம் | kaṟṟaḻam n.<>கல் + sthala. [M. kaltaḷam or kattaḷam.] Pavement கற்கள்படுத்த தரை . |
கற்றளி | kaṟṟaḷi n. <>id. + sthalī. Temple built of stone ; கற்கோயில். நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி (S.I.I. ii, 2). |
கற்றளை | kaṟṟaḷai n. perh. id. + தலை. A genus of sea-fish, Sciaena ; கடல்மீன்வகை. (பதார்த்த. 935.) |
கற்றறிமூடன் | kaṟṟaṟi-mūṭaṉ n. <>கல்- + அறி- +. Learned fool ; படித்த முட்டாள் |
கற்றறிமோழை | kaṟṟaṟi-mōḷai n. <>id. + id. +. See கற்றறிழடன். ஆயிரம்வேதங் கற்றும் நீயே கற்றறிமோழை (இராமநா. உயுத். 82). . |
கற்றறிவு | kaṟṟaṟivu n. <>id. + id. Knowledge acquired by learning ; கற்றதனாலாகிய அறிவு. |
கற்றா | kaṟṟā n. <>கன்று + ஆ. Cow with a young calf ; கன்றையுடைய பசு. கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே (திருவாச. 39, 3) . |
கற்றாமரை | kaṟṟāmarai n. <>கல் + தாமரை. [M. Tu. kaltāmara.] A mountain plant ; மலைப்பூடுவகை. (பதார்த்த. 297.) |
கற்றார் | kaṟṟār n. <>கல்-. Learned men ; கல்விமான்கள். கற்றா ரனைத்திலர் பாடு (குறள், 409). |
கற்றாழஞ்சோறு | kaṟṟāḻaṉ-cōṟu n. <>கற்றாழை +. Pith of the aloe ; கற்றாழையின் உள்ளீடான பகுதி. (J.) |
கற்றாழை | kaṟṟāḻai n. <>கல் + தாழை. [M. kaṟṟavāḻa.] 1. Aloe, m.sh. Aloe vera ; ஒரு பூடு. (பதார்த்த. 370, தலைப்பு.) 2. Curacoa aloes, m.sh., Aloe vera-officinalis ; 3. Barbadoes aloe, m.sh., Aloe vera-typica ; |
கற்றானை | kaṟṟāṉai n. <>id. + தானை. Garment dyed in ochre, as wora by ascetics ; காவிச் சிலை. கற்றனை முக்கோ லந்தணீர் (மறைசை.84). |
கற்றிருத்து - தல் | kaṟṟiruttu- v. intr. <>id. + திருத்து. To shape stones, as with a chisel ; கல்லை உளியாற் செப்பமாக்குதல். (C.E.M.) |
கற்றிருப்பணி | kaṟṟiruppaṇi n. <>id. + திருப்பணி. Sacred task of erecting or repairing stone temples ; கற்களாற்செய்யும் கோயில்வேலை. |
கற்றீட்டு | kaṟṟīṭṭi n. <>id. + தீட்டு. Rockalum ; கன்மதம். (யாழ். அக.) |
கற்றுக்குட்டி | kaṟṟu-k-kuṭṭi n. <>கல்- +. 1. Very young student ; கற்குஞ் சிறுவன். (w.) 2. Superificial scholar, one who has a smattering of knowledge ; |
கற்றுக்கொடு - த்தல் | kaṟṟu-k-koṭu- v. tr. <>id. +. To instruct ; போதித்தல். Colloq. |
கற்றுக்கொள் - (ளு)-தல் | kaṟṟu-k-koḷ v. tr. <>id. +. To learn ; பயிலுதல். கற்றுக்கொள்வன வாயுள நாவுள (தேவா.1205, 6). |
கற்றுச்சொல்லி | kaṟṟu-c-colli n. <>id. +. See கற்றுச்சொல்வோன். . |
கற்றுச்சொல்வோன் | kaṟṟu-c-colvōṉ n. <>id. +. Junior poet who always accompanies his teacher and speaks out for him ; புலவனொருவனிடங்கற்று அவனுக்குத் துணைப்புலவனா யிருப்பவன். கற்றுச்சொல்வோர் பின்வர ... வந்தனன் புலவனாகி (திருவாலவா. 16, 19). |
கற்றுரிஞ்சில் | kaṟṟuricil n. <>கல் + துரிஞ்சில். San tree. See பீலிவாகை. (L.). . |
கற்றுளசி | kaṟṟuḷaci n. <>id. + துளசி. Mountain basil ; மலைத்துளசி. (பதார்த்த. 307.) |
கற்றேக்கு | kaṟṟēkku n. <>id. + தேக்கு. 1. Racemed fish-bone tree, m.tr., Dillenia bracteata ; ஒருவகை மரம். 2. Carey's myrtle bloom. See கும்பிமரம். (L.) |
கற்றை | kaṟṟai n. 1. Collection, as of hair, rays of the sun ; திரள். சடைக்கற்றை (திருக்கோ. 134). 2. [M. kaṟṟa.] Bundle, as of straw, grass, paddy seedlings ; 3. Coconut leaves braided like ropes, as bands for hedging ; |
கற்றைபிடி - த்தல் | kaṟṟai-piṭi- v. intr. <>கற்றை +. (J.) 1. To braid coconut bands ; தென்னோலை பின்னுதல். 2. To fasten with kaṟṟai a hedge, the thatch on a house ; |
கற்றைபோடு - தல் | kaṟṟai-pōṭu- v. intr. <>id. +. To thatch ; கூரைவேய்தல். (w.) |
கற்றைவைத்துக்கட்டு - தல் | kaṟṟai-vaittu-k-kaṭṭu- v. intr. <>id. +. (j.) 1. To tie a hedge with kaṟṟai ; நிரைச்சல் கட்டுதல். 2. To build with handfuls of mud ; |
கற்றொட்டி | Kaṟṟoṭṭi n. <>கல் + தொட்டி. [M. kaltoṭṭi.] A stone trough ; கருங்கல்லாற் செய்யப்பட்ட நீர்த்தொட்டி. |
கற்றொழிலோர் | kaṟṟoḻilōr n. <>id. + தொழிலோர். Stone-masons, architects ; சிற்பாசாரிகள். (பிங்.) |