Word |
English & Tamil Meaning |
---|---|
அஃபோதம் | aḵpōtam n. cf. kapōta. Cakōra, a fabled bird; சகோரம். (பிங்.) |
அஃறிணை | aḵṟiṇai n. <>அல் + திணை. Inferior class of beings, whether animate or inanimate, neuter, opp. to உயர்திணை; உயர்திணை யல்லாத சாதி. (நன்.261). |
அக்கக்காய் | akkakkāy adv. <>அக்கு +. [Tu.akkakka.] Asunder; துண்டு துண்டாக. colloq. |
அக்கச்சி | akkacci n. <>அக்கைச்சி. Elder sister; தமக்கை. அக்கச்சி யுடைமை அரிசி தங்கச்சி யுடைமை தவிடு. colloq. |
அக்கசாலை | akka-cālai n. <>arka+. 1. Metal works; பொன் முதலிய உலோக வேலை செய்யு மிடம். (சிலப். 16, 126, உரை). 2. Mint; |
அக்கசாலையர் | akka-cālaiyar n. <>id.+. Goldsmiths, jewellers; தட்டார். (பிங்.) |
அக்கசூத்திரம் | akka-cūttiram n. <>akṣa +. String of rutrākṣa beads; உருத்திராக்ஷ மாலை (சித். சா. கிரியா, 83, தாத்.) |
அக்கட 1 | akkaṭa int. [K. akkaṭa.] An exclamation of wonder; ஓர் ஆச்சரியக்குறிப்பு. அக்கட விராவணற் கமைந்த வாற்றலே (கம்பரா.யுத்.மந்திர.32) |
அக்கட 2 | akkaṭa adv. <>T.akkada (அ+கடை). There; அவ்விடம். அக்கட போவெனும் (தனிப்பா. ii,3,5). |
அக்கடாவெனல் | akkaṭā-v-eṉal n. [T. akkaṭā.] Onom. expr. of repose, non- interference; சும்மாவிருத்தற் குறிப்பு. Colloq. |
அக்கடி | akkaṭi n. cf. akka+ அடி. Difficulty, trouble in a voyage or journey, peril; அலைவு. எனக்கு அக்கடியா யிருக்கிறது. (R.) |
அக்கணம் | akkaṇam n. cf. ṭaṅkaṇa, Borax. See வெண்காரம். (W.) |
அக்கணா | akkaṇā n. cf. akṣa. Belleric myrobalan. See தான்றி. (W.) |
அக்கதம் | akkatam n. <>a-kṣata. 1. Unbroken grains of rice, used in benediction or worship; ஆசி முதலியவற்றில் உபயோகிக்கும் முழுவரிசி. சிந்துந் துணரு மக்கதமும் (கந்தபு.சூரனர.25). 2. Rice and Cynodon grass. See. அச்சுதம். |
அக்கதேவி | akkatēvi n. Species of grass. See. சோனைப்புல். (மலை.) |
அக்கதை | akkatai n.<>a-kṣata. Unbroken grains of rice. See அட்சதை. (பிரபுலிங்.மாயைபூ.44). |
அக்கந்தம் | akkantam n. cf. akṣa. Belleric myrobalan. See தான்றி. (W.) |
அக்கந்து | akkantu n. The ridge of chaff which gathers on the edge of a threshing floor; து£ற்றுகையில் தானியக் குவியலின் புறத்தே விலகிய பதர். (J.) |
அக்கப்பறை | akka-p-paṟai n. cf. akka+ பற-. Wandering about; அலைகை. (சம்.அக.) |
அக்கப்பாடு | akka-p-pāṭu n. cf. id.+. 1. Disaster at sea; மரக்கலச் சேதம். (W.) 2. Loss of cargo; |
அக்கப்போர் 1 | akka-p-pōr n. cf. id.+. 1. Affray, scuffle; கலகம். Colloq. 2. Worry, trouble; |
அக்கப்போர் 2 | akkappōr n. <>U.akhbār. Gossip, rumour, anonymous communication; வம்புப்பேச்சு. Colloq. |
அக்கபாதன் | akka-pātaṉ n. <>Akṣapāda. Gautama, the sage, founder of the Nyāya system of philosophy. See. அட்சபாதன். (மணி. 27,82) |
அக்கபிரம் | akkapiram n. cf. pika-piriya. Mango tree. See மாமரம். (மலை.) |
அக்கம் 1 | akkam n. [K.akki.] cf. argha. Grain; தானியம். |
அக்கம் 2 | akkam n. Rope, cord; கயிறு. (சூடா.) |
அக்கம் 3 | akkam n. <>akṣa. 1. Eye; கண். (திவா.) 2. Rudrākṣa bead; 3. Belleric myrobalan. See தான்றி. |
அக்கம் 4 | akkam n. <>arka. An ancient coin =1/12 காசு; ஒரு பழைய நாணயம். (S.I.I.ii.123.) |
அக்கம்பக்கம் | akkam-pakkam n. cf. akka+. This way and that way; அண்டை யயல் அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. |
அக்கமணி | akka-maṇi n. <>akṣa+. Rudrākṣa bead; உருத்திராக்க மணி. பொறியர வக்க மணித் தொடை பூண்டு (திருக்காளத்.பு. 5,27). |
அக்கமாலை | akka-mālai n. <>id.+. 1. String of rudrākṣa beads; உருத்திராக்க மாலை. புகலுறு மக்கமாலை புனைகுவோர் தம்மை (பிரபோத. 18,3). 2. Rosary; |
அக்கரகாரம் | akkarakāram n. <>U. akarkarhā. Pellitory root, pyrethri radix; ஒரு மருந்துவேர். அக்கரகார மதன்பே ருரைத்தக்கால் (பதார்த்த 990). |
அக்கரகாலம் | akkara-kālam n. <>a-kṣara +.(Mus.) Chief unit of time. See அட்சரகாலம். (பரத.தாள.50.) |
அக்கரச்சுதகம் | akkara-c-cutakam n. <>a-kṣara-cyutaka. Verse composed with a play on words, a word by gradual elimination becoming different words with different meanings, as in கநகாரி, நகாரி, காரி, or பாலாவி, பாலா; பா; ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி அச் சொல்லில் ஓரோ ரெழுத்தாக நீக்க வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரகவி. (தண்டி.95;யாப்.வி.ஒழிபி.1,உரை.) |