Word |
English & Tamil Meaning |
---|---|
அ 1 | a n. First letter and vowel of the alphabet; நெடுங்கணக்கில் முதலுயிரெழுத்து. |
அ 2 | a n. Symbol for the number 8, printed without the loop at the top (அ); எட்டென்னும் எண்ணின் குறி. அ உ அறியா(யாப்.வி.37, உரை) |
அ 3 | a part. 1. Demonst.: (a) base of the demonst. pron. expressing the remoter person or thing; (b) pref. to nouns, expressing remoteness; (c) pref. expressing world-wide eminence; ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி.போ.1); ஓர் புறச்சுட்டு. அக்கொற்றன்; உலகறிசுட்டு. அத்தம்பெருமான் (சீவக.221). 2. A euphonic augment, as in தமிழப்பிள்ளை; 3. Neut. pl. noun suff., as in பல; 4. A gen. ending, followed by a neut. pl., as in என கைகள்; 5. Verb ending: (a) neut. pl., as in வந்தன; (b) opt.; (c) vbl. pple., as in வர; (d) rel. pple., as in வந்த; 6. An expletive, generally in poetry; 7. Euphonic prothesis of Sanskritic words beginning with ர, as in அரங்கம். |
அ 4 | a (before a vowel aṉ) part. <>a. Skt. pref. implying negation (as in அரூபம்), privation (as in அப்பிராமணன்), or contrariety (as in அதர்மம்); இன்மை யன்மை மறுதலைப் பொருள்களில் வரும் ந என்னும் அவ்வியயத்தின் திரிபு. |
அ 5 | a n.<>a. 1. Viṣṇu; திருமால். அவ்வென் சொற் பொருளாவான் (பாகவ.சிசுபா.20) 2. Siva; |
அஆ | aā int. Ah expressing pity; ஓர் இரக்கக் குறிப்பு. (நாலடி.9.) |
அஃகம் 1 | aḵkam n. [K.akki.] cf.argha. Grain; தானியம். (சினேந்.425.) |
அஃகம் 2 | aḵkam n. Course of action. முறைமை ஒரூ ரிரண்டஃக மாயிற்று (சீவக. 2087.) |
அஃகரம் | aḵkaram n. cf.alarka. White madar. See வெள்ளெருக்கு. (W.) . |
அஃகல் | aḵkal n. <>அஃகு-. 1. Becoming small, being reduced; சிறிதாகை. (திவா.) 2. Poverty, destitution; |
அஃகான் | aḵkāṉ n. <>அ+கான். The letter அ; அகரம். அஃகா னடைவு மாகும் (நன்.212). |
அஃகு 1 - தல் | aḵku- 5v. intr. [K. akkudisu.] prob. அல்கு-. 1 To be shortened, as a vowel; அளவிற் குறுகுதல். (நன்.60) 2. To be reduced, to shrink; 3. To be dejected; 4. To be acute, refined; 5. To pass away; 6. To become closed, compressed, as a flower; |
அஃகு 2 | aḵku n. <>அஃகு-. Oozing water; ஊறுநீர். (திவா.) |
அஃகுல்லி | aḵkulli n. cf. saṣkulī. A steamed meal-cake; உக்காரி யென்னும் சிற்றுண்டி. (பிங்.) |
அஃகேனம் | aḵkēṉam n. <>அ + ஃ + ஏனம். The letter ஃ; ஆயுதவெழுத்து. அஃகேனமாய்தம் (காரிகை.உறுப். 4,உரை). |
அஃதான்று | aḵtāṉṟu adv. <>அஃது+அன்று. Besides. See அதான்று. (திருவாச.3,28). |
அஃது | aḵtu pron. <>அ. That, used before words commencing with a vowel, as in அஃதாவது; அது. (தொல்.எழுத். 423, உரை). |
அஃதே | aḵtē int. <>id.+. 1. Indeed! அப்படியா! அஃதே யடிகளு முளரோ(சீவக.1884). 2. All right! |
அஃதை | aḵtai n. Name of the daughter of a Cōḻā king; சோழனொருவன் மகள். (அகநா.96). |