Word |
English & Tamil Meaning |
---|---|
அக்கரதீபம் | akkara-tīpam n. <>a-kṣara +. Row of 51 lights set up as a votive offering in temples. See அட்சரதீபம். (பரத. ஒழிபி.42) |
அக்கரம் 1 | akkaram n. cf. alarka. White madar. See வெள்ளெருக்கு. (மலை.) |
அக்கரம் 2 | akkaram n. <>sahakāra. Mango tree. See மாமரம். (மலை.) |
அக்கரம் 3 | akkaram n. 1.[M.akkaram.] Thrush, aphthae, parasitic stomatitis, a disease of the mouth; வாய்நோய் வகை. அக்கரங்கள் தீர்க்கும் (பதார்த்த.327). 2. A form of diarrhoea; |
அக்கரம் 4 | akkaram n. <>a-kṣara. 1. Letter of the alphabet; எழுத்து. (சிவதரு. கோபுர.219.) 2. Learning; |
அக்கரம் 5 | akkaram n. <>அக்கரகாரம் [T.akkara, K. akkala]. Pellitory root. See அக்கரகாரம். (மூ.அ.) |
அக்கரவர்த்தனம் | akkara-varttaṉam n. <>a-kṣara+vardhana. Verse composed with a play on words, a word by gradual addition becoming different words with different meanings, as in கம், நகம், கநகம், கோகநகம், or கா, காவி, காவிரி; ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி அச்சொல்லோடு ஓரோ ரெழுத்தாகக் கூட்ட வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரகவி. (பி.வி.26,உரை.) |
அக்கரவிலக்கணம் | akkara-v-ilakkaṇam n. <>a-kṣara+. Orthography, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலையுள் ஒன்றாகிய எழுத்திலக்கணம். |
அக்கரன் | akkaraṉ n. <>a-kṣara. God, as the indestructible One; கடவுள். (சங்.அக.) |
அக்கராகாரம் | akkarākāram n. Pellitory root. See அக்கரகாரம். . |
அக்கராலத்தி | akkarālatti n. <>a-kṣara + ārati. 51 lights arranged in concentric circles in a circular metallic tray and waved in front of the main shrine as a special thanksgiving offering to the Deity; கோயிற் றீப வகை (குற்றா.கல.சிவபூசை.48) |
அக்கரிவாள் | akkarivāḷ n. Billhook for lopping thorns and prickly pear; அரிவாள் வகை. |
அக்கரை 1 | a-k-karai n. <>அ+. Further shore, opposite bank; நீர்நிலையின் மறுகரை. (கந்தரந்.10) |
அக்கரை 2 | akkarai n. Need, interest. See அக்கறை. உம்ப ரக்கரையா யனுப்ப (தனிப்பா.i,373,12) |
அக்கரைச்சீமை | a-k-karai-c-cīmai n. <>அ+. Country on the opposite shore; கடலுக்கு அக்கரையி லுள்ள தேசம். |
அக்கரைப்பச்சை | a-k-karai-p-paccai n. <>id.+. Illusion whereby, when viewed from one bank, the verdure on the opposite bank appears greener; அக்கரை பசேரென்று காட்டும் பொய்த் தோற்றம். அது உனக்கு அக்கரைப் பச்சையாயிருக்கிறது. |
அக்கரைப்படுத்து - தல் | a-k-karai-p-paṭuttu- v.tr. <>id.+. To ferry over; ஓடத்திலேற்றி ஆற்றைக் கடப்பித்தல். |
அக்கரையர் | a-k-karaiyar n. <>id. +. Heavenly beings, as inhabiting the regions beyond the ocean of samsāra; பரலோகவாசிகள். அக்கரையராய் ... நித்யஸூரிகளில் ஒருவர் வந்தவதரித்தார் (உபதேச ரத். அவதா. பக்.1) |
அக்கரையான் | a-k-karaiyāṉ n. <>id. +. One who lives on the further shore; கடலுக்கு அக்கரையி லுள்ள நாட்டான். |
அக்கரோட்டு | akkarōṭṭu n. <>U.akhrōṭ <>akṣōṭa. English walnut, l.tr., Juglansregia; மரவகை. |
அக்களிப்பு | akkaḷippu n. <>அகம் + களிப்பு. Exultation; மனமகிழ்ச்சி. சக்களத்திகள் அக்களிப்பொடு கெக்கலிப்பட (சர்வச.கீர்த்.186) |
அக்கறை | akkaṟai n. [T. akkaṟa, K.akkaṟe.] 1. Concern, interest; கவனம். 2. Need, necessity; |
அக்கறைப்படு - தல் | akkaṟai-p-paṭu- v.intr. <>அக்கறை +. To become interested; சிரத்தை கொள்ளுதல். நீ அக்கறைப்பட்டால் உனக்கு அது கிடைக்கும். |
அக்கன் 1 | akkaṉ n. <>அக்கை. Elder sister; தமக்கை. நாம் கொடுத்தனவும் அக்கன் கொடுத்தனவும் (S.I.I.ii,2). |
அக்கன் 2 | akkaṉ n. cf. alarka. Dog; நாய். (சூடா.) |
அக்கா | akkā n. [T.K.M.Tu. akka.] cf. akkā. 1. Elder sister; தமக்கை. 2. Goddess of evil, as elder sister of Lakṣmī; |
அக்காக்காய் | a-k-kākkāy n. <>அ prothetic +. Onom. expr. imitating the cawing of a crow, used to keep a child quiet while braiding its hair; சிறு பிள்ளைகளைக் குழல்வாருவார் சீராட்டாகச் சொல்லும் சொல். (திவ்.பெரியாழ்.2,5,1.) |