Word |
English & Tamil Meaning |
---|---|
ஸப்தஸரம் | sapta-saram n. <>saptan+. A kind of necklace; சப்தசரி. த்ரிஸரம் பஞ்சஸரம் ஸப்தஸரம் என்றாப்போலே (தில். அமலனாதி. 10, வ்யா. பக். 104). |
ஸம்பத்தி | sampatti n. <>sampatti. Qualification; தகுதி. திருநாமம் சொல்லும்போது ஒரு அதிகாரி ஸம்பத்தி தேடவேண்டா (ஈடு, 10, 2, 5). |
ஸம்போதி - த்தல் | sampōti- 11 v. tr. <>sam-budh. To address; விளித்துக்கூறுதல். ஜைன தர்மாம்ருதத்தினை விஸ்மரியாதுகொள் என்று ஸம்போதித்தமை நீயே அறிந்தருளுதி (ஸ்ரீபுராணம், Ms.). |
ஸம்மானி - த்தல் | sammāṉi- 11 v. tr. <>sam-māna. To reward; வெகுமதித்தல். (தென். இந். க்ஷேத். பக். 289.) |
ஸம்வதி - த்தல் | samvati- 11 v. tr. & intr. <>sam-vad. To agree to; சம்மதித்தல். கண்டூதியாலே உடம்பைப் படுக்கையிலே தேய்த்துக்கொண்டு கிடக்க நான் ஸம்வதியேன் (தில். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 310). |
ஸம்ஹரி - த்தல் | samhari- 11 v. tr. <>sam-hṟ. To destroy; அழித்தல். (தென். இந். க்ஷேத். பக். 60.) |
ஸம்ஷ்டி | samaṣṭi n. <>samaṣṭi. Federation; ஒரே பேரரசாட்சியாகப் பல அரசாங்கங்களைத் தொகுக்கை. Mod. |
ஸமாகமம் | samākamam n. <>samāgama. Meeting; சந்திப்பு. இதற்கெதிர் மூன்றாம்நாள் நின்பிராணவல்லபனோடு ஸமாகமம் உண்டாகும் (ஸ்ரீபுராணம், Ms.). |
ஸமாதானம் | samātāṉam n. <>samādāna. Reconstruction; restoration, as of a temple; கோயில் முதலியவற்றைக் கட்டி யொழுங்கு படுத்துகை. அக்கோயிலை ஸமாதானம் பண்ணுவார் போல (நீலகேசி, 335, உரை). |
ஸமானதிகரணம் | samāṉātikaraṇam n. <>samāṇa+adhikaraṇa. (Phil.) Being located in or dependent on the same substance; ஒரு பொருளையே ஆசிரயித்திருக்கை. |
ஸமானாதிகரி - த்தல் | samāṉāti-kari- 11 v. intr. <>id.+adhikṟ. 1. To be in the same place; to be subject to samāṉātikaraṇam; ஸமானாதிகரணமாயிருத்தல். 2. To express in terms of samāṉātikaraṇam; |
ஸமிஞ்ஞை | samiai n. <>samjā. Signature; கையெழுத்து. (S. I. I. vii, 491.) |
ஸர்வஸ்வதந்திரம் | sarva-svatantiram n. <>id.+. Omnipotence; எவற்றையும் ஆளுந்தன்மை. |
ஸர்வஸ்வஹரணம் | sarvasva-haraṇam n. <>sarvasva+. Total forfeiture of one's property; சொத்தையெல்லாம் பறிமுதல் செய்கை. இவர்களை ஸர்வஸ்வஹாணம் பண்ணக்கடவதாகவும் (M. E. R. 89 of 1931-32). |
ஸர்வஸாதாரணம் | sarva-sātāraṇam n. <>sarva+. That which is very common; commonplace; பலருக்கும் பொதுவானது. Colloq. |
ஸாம்சம் | sāmcam n. <>sāmša. That which is divisible; பகுக்கத் தக்கது. அணு ஸாம்சசமாமென்றான் (நீலகேசி, 396, உரை). |
ஸித்தாந்தி - த்தல் | sittānti- 11 v. tr. <>siddhānṭa. To establish, as one's own view; உறுதிசெய்தல். மகள் வார்த்தையாலே ஸித்தாந்திக்கிறது (திவ். திருநெடுஞ். 18, வ்யா.). |
ஸூகி | suki n. <>sukhin. Pleasure-seeker; சுகம் அனுபவிப்போன். (தென். இந். க்ஷேத். பக். 71). |
ஸூக்ஷேத்ரம் | sukṣētram n. <>su-kṣētra. Wet field; நன்செய். ஸூக்ஷேத்ரம் மணல்மேடானாற்போலே (தில். திருநெடுஞ். 17, வ்யா.). |
ஸூசகம் | sūcakam n. <>sūcaka. Hint; குறிப்பு. Loc. |
ஸேனாபதி | sēṉāpati n.<>sēnā-pati. Viṣvaksēna; சேனைமுதலியார். ஸ்ரீ ஸேனாபதி யாழ்வான் பிரம்பினுள்ளுங்காண் இத்தத்துவம் வளருவது (திவ். பெரியதி. 1, 2, 6, வ்யா. பக். 76). |
ஸேனாபதிபெருவிலை | sēṉāpati-peruvilai n. <>id.+. Sale of lands belonging to Viṣṇutemples; விஷ்ணு கோயில்களுக்குரிய நிலத்தின் விற்பனை. (S. I. I. iv, 143.) |