Word |
English & Tamil Meaning |
---|---|
வைசிகன் | vaicikaṉ n. <>Vaišya. Man belonging to the Vaišya community; வைசியன். வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொல். பொ. 632). |
வைத்தியபுரந்தரன் | vaittiya-purantaraṉ n. <>vaidya+. A title bestowed on medical men; வைத்தியர் பட்டங்களுளொன்று. தேவாண்டாரான வைத்திய புரந்தரற்கு (S. I. I. iv, 133). |
வைத்தியபோகம் | vaittiya-pōkam n.<>id.+. Land gifted for the maintenance of hospitals; வைத்தியசாலைக்கு இனாமாக விடப்பட்ட நிலம். (M. E. R. 249 of 1923-24.) |
வைதிகசாத்திரம் | vaitika-cāttiram n. <>vaidika+. The Pūrva-mīmamsā, Nyāya and Vaišēṣika šāstras; பூர்வமீமாஞ்சை நியாயம் வைசேடிகம் என்னுஞ் சாத்திரங்கள். (விவேகசிந். பக். 15.) |
வைதிகவாரணம் | vaitika-vāraṇam n.<>id.+. Tiruāṉa-campantamūurtti Nāyaṉār; திருஞானசம்பாந்தமூர்த்திநாயனார். மதுரா புரிவா தறிவா மெனமேல் வரவந் தனன் வைதிக வாரணமே (தக்க யாகப். 183.) |
வைதிகவிபூதி | vaitika-vipūti n. <>id.+. Sacred ashes from the sacrifical pit; வேதவிதிப் படி செய்யும் யாககுண்டங்களினின்றும் பெறும் நீறு. சைவபூ. சந். 59). |
வைப்புப்பொருள் | vaippu-p-poruḷ n. <>வைப்பு+. Reserve fund; சேமநிதி. Mod. |
வையாகரணன் | vaiyākaraṇaṉ n. <>vaiyākaraṇa. Person belonging to the school of philosophy which holds that God is Sound; சத்தமே பிரமமென்னுங் கொள்கையினன். வையாகரணர் சொல்லும் மறுமாற்றங்கள் மாற்றுவமே (தேசிகப். 5, 28). |
வைராவி | vairāvi n. Temple servant, among Nāṭṭukōṭṭai Cheṭṭis; நாட்டுகோட்டைச்செட்டிமாரது கோயிற்பணியாள். (E. T. v, 60). |
வைஷ்ணவபஞ்சதபனம் | vaiṣṇava-paca-tapaṉam n. <>vaiṣṇava+. The five Upaniṣads of Vaiṣṇavism, viz., irāmatāpiṉi, kōpālatāpiṉi, naracimmatāpiṉi, makānārāyaṇam, ayakkirīvam; இராமதாபினி கோபால தாபினி நரசிம்மதாபினி மகாநாராயணம் அயக்கிரீவம் என்னும் ஐந்து வைஷ்ணவ உபநிடதங்கள். (சைவபூ. சந். 24). |
ஜ்யேஷ்டாதேவி | Jyēṣṭā-dēvi n. <>jyēṣṭhā+. The Goddess of Misfortune; மூதேவி. ஜ்யேஷ்டாதேவிக்குக் கொடியாய் ப்ராணனை நோக்கித் திரிகையாலும் (திவ். பெரியாழ். 2, 5, ப்ர. பக். 332). |
ஜ்யோதிஸ்வரூபினி | jyōtisvarūpiṇi n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்ளு. (சங். சந். 47). |
ஜகன்மோகனம் | jakaṉmōkaṉam n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
ஜங்காரத்வனி | jaṅkāratvaṉi n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
ஜம்கானா | jamkāṉā n. <>Persn. jamkhana. Carpet, rug; சமக்காளம். (C. G.) |
ஜம்புல் | jampul n. A jewel; அணிவகை. (தாசீல்தார்நா. பக். 40). |
ஜயங்கொண்டசோழமண்டலம் | jayaṅ-koṇta-cōḻa-maṅṭalam n. Toṇṭai-nāṭu, so called after. Jayaṅkoṇṭa-cōḻaṉ; தொண்டைநாடு. (Ane. Dec.) |
ஜயன் | jayaṉ n. The deity who presides over the camāṉaṉ; சமானனை யேவுகிற தேவதை. (வேதாந்தசா. பக். 43.) |
ஜல்ஸா | jalsā n. <>Arab. jalsa. Convivial party; உல்லாசக் கச்சேரி. (மதி. க. ii, 184.) |
ஜலதம் | jalatam n. <>jala-da. Hydrogen; ஜலவாயு. (விவசாயரசா. 7). |
ஜலபுட்பம் | jala-puṭpam n. <>ஜலம்+. Fish; மீன். (மதி. க. ii, 38.) |
ஜலார்ணவம் | jalārṇavam n.(Mus). A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47). |
ஜவளிப்பிரம்பு | javaḷi-p-pirampu n. perh. சவளு+. Small, slender bamboo cane; வளையும் படி மெல்லிதான பொடிப்பிரம்பு. ஜவளிப்பிரம்பெடுத்து ஜாடுதுபார் (கோவ. க. 38). |
ஜன்மக்காணி | jaṉma-k-kāṇi n. <>ஜன்மம்+. Birthright; பிறப்புரிமை. (M. E. R. 175 of 1923-c.) |