Word |
English & Tamil Meaning |
---|---|
வெந்தூறல் | ventuṟal n. cf. வெந்துருகல். A defect in coins; நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 66.) |
வெம்மை | vemmai n. Extreme pain or distress; கொடுந் துன்பம். வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் (கம்பரா. இராவணன்சோக. 10). |
வெள்ளங்கோ - த்தல் | veḷḷaṅ-kō- v. intr. <>வெள்ளம்+. To rise in floods; வெள்ளமிடுதல். அவர்கள் பக்கலிலே அவன் பண்ணின அருள் நம்மளவும்வர வெள்ளங்கோத்ததுகாண் (ஈடு, 10, 6, 1). |
வெள்ளவாரிகம்மி | veḷḷa-vāri-kammi n.<>id.+. Remission of land tax, due to damage by floods; வெள்ளச்சேதத்திற்காகச் செய்யும் வரித் தள்ளுபடி. (தாசீல்தார்நா. பக். 22.) |
வெள்ளாட்டுமான் | veḷḷāṭṭu-māṉ n.<>வெள்ளாடு+. A kind of deer; மான்வகை. Pond. |
வெள்ளாண்வெட்டி | veḷḷāṇveṭṭi n. A tax; வரிவகை. (S. I. I. viii, 21.) |
வெள்ளாயன் | veḷ-ḷ-āyaṉ n. <>வெண்-மை+. Shepherd; ஆட்டிடையன். நானுமொரு வெள்ளாயன் நக்குமொரு தலைவாகை (தாசீல்தார்நா. பக். 11). |
வெள்ளித்தங்கம் | veḷḷi-t-taṅkam n.<>வெள்ளி+. Platinum; உலோகவகை. Mod. |
வெள்ளிமணி | veḷḷi-maṇi n.<>id.+. Conch bead; அக்குமணி. (திவ். பெரியாழ். 1, 7, 8, வ்யா.) |
வெள்ளுழவு | veḷ-ḷ-uḻavu n. <>வெண்-மை+. Dry ploughing; நிலம் காய்த்திருக்கையி லுழும் உழுவு. (யாழ். அக.) |
வெள்ளைக்கலி | veḷḷai-k-kali n. prob. வெள்ளை+. A coin; நாணயவகை. (சரவண பணவிடு. 206-207.) |
வெள்ளைக்குண்டஞ்சம்பா | veḷḷai-k-kuṇṭa-campā n.<>id.+. A kind of campā paddy; சம்பா நெல்வகை. (விவசா. 2.) |
வெள்ளைக்கூம்பாளை | veḷḷai-k-kūmpāḷai n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (விவசா. 2.) |
வெள்ளைமை | veḷḷaimai n. <>id. White lead; ஈயவெள்ளை. Pond. |
வெள்ளைமொச்சை | veḷḷai-moccai n.<>id.+. A kind of hyacinth bean; மொச்சைவகை. (விவசா. 4.) |
வெள்ளையதிக்கிராதி | veḷḷai-y-atikkirāti n.<>id.+ அரிக்கிராவி. A kind of paddy; நெல்வகை. (நெல்விடு. 187.) |
வெள்ளையிறுங்கு | veḷḷai-y-iṟuṅku n. <>id.+. A kind of maize; சோளவகை. (விவசா. 3.) |
வெள்ளைவாசி | veḷḷai-vāci n. <>id+. Simple interest; நெடுவட்டி. நீக்கிநின்ற நெல்லுக்கு வெள்ளைவாசியேற்றி (S. I. I. vii, 487.) |
வெள்ளைவாரி | veḷḷai-vāri n. prob. id.+. A tax; வரிவகை. (S. I. I. vi, 189.) |
வெள்ளோக்கத்தார் | veḷ-ḷ-ōkkattār n.<>வெண்-மை + ஓக்கம். Persons whose relations are of spotless character; வெள்ளொக்கலர். (நேமி நா. 66, உரை.) |
வெளிக்கோயில் | veḷi-k-kōyil n.<>வெளி+. Subordinate temple located outside the major shrine; பெரியகோயிலைச் சார்ந்ததும் அதற்குப் புறம்பிலே யுள்ளதுமான கோயில். |
வெளிப்படைநிலை | veḷippaṭai-nilai n.<>வெளிப்ப¬டை+. (Akap.) Theme revealing the secret love-affair of the heroine to her parents and others; அறத்தொடுநிற்றல். (களவியற். 122.) |
வெளிப்பாடு | veḷippāṭu n. <>வெளிப்படு-. Discovery; புதிதாய்க் கண்டு பிடித்தது. Pond. |
வெளுங்கு | veḷuṅku n. A tree; மரவகை. (S. I. I. IV, 431, 433.) |
வெற்றுக்கடுதாசி | veṟṟu-k-kaṭutāci n. <>வெறு-மை+. Waste paper; எழுத உதவாத கடுதாசி. Loc. |
வெற்றுவண்டி | veṟṟu-vaṅṭi n. <>id.+. Empty cart without load or passengers; பாரமேற்றாத வண்டி. Colloq. |
வெற்றுவெடி | veṟṟu-veṭi n. <>id.+. Blank cartridge; சத்தம்மட்டும் உண்டாக்கும் வெடி. Colloq. |
வெறிபாய் - தல் | veṟi-pāy- v. intr. <>வெறி-+. To be desolate, empty; வெறித்தல். க்ருஹமானது வெறிபாய்ந்து விட்டது (திவ். பெரியாழ். 3, 8, 1, வ்யா. பக். 736.) |
வெறுங்கல்லறை | veṟuṅ-kallaṟai n.<>வெறு-மை+. Cenotaph; சவத்தை யடக்கஞ்செய்யாது ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை. Pond. |
வெறுந்தரையாக்கு - தல் | veṟun-tarai-y-ākku- v. tr.<>id.+. To remove entirely without leaving a trace; சுவடின்றியே முற்றும் கவருதல். அந்த உறிகளின் குறியழியாதிருக்க, அந்த வெண்ணெய்களை வெறுந்தரையாக்கினாப்போலே (திவ், அமலனாதி, 10, வ்யா. பக். 113). |