Word |
English & Tamil Meaning |
---|---|
வென்காண்(ணு) - தல் | veṉ-kāṇ- v. tr. <>வெந்+. See வென்கொள்-. பாண்டியனை இருமடி வென்கண்ட சோழ சதுர்வேதிமங்கலம் (S. I. I. iii, 77). . |
வென்கொள்(ளு) - தல் | veṉ-koḷ- v. tr. <>id.+. To defeat and cause to retreat; தோற்றோடச் செய்தல். பாண்டியனை இருமடி வென்கொண்ட (S, I.I. iii, 71). |
வேகவாகினி | vēka-vākiṉi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103). |
வேசங்கை | vēcaṅkai n. (Jaina.) One of nava-niti; நவநிதியு ளொன்று. (சீவசம். Ms.) |
வேசாரி | vēcāri n.<>வியபிசாரி. Woman who goes astray; அவிசாரி. Loc. |
வேட்டைப்பை | vēṭṭai-p-pai n. <>வேட்டை+. Hunter's pouch for cartridges, etc.; வேட்டையாடுதற்குரிய மருந்து வெடி முதலானவை வைக்கும் பை. Pond. |
வேட்டையிராகம் | vēṭṭai-y-irākam n. <>id+. Hunting note; வேட்டைக்குரிய பண். Pond. |
வேடிக்கையரங்கம் | vēṭikkai-y-araṅkam n. <>வேடிக்கை+. Circus; கசரத்து முதலான வேடிக்கைகள் காட்டு மிடம். Pond. |
வேடுமுள் | vēṭu-muḷ n. perh. வேடு+. Pulpy podded black babool; வேலமரவகை. (L.) |
வேண்டப்பாடு | vēṇṭa-p-pāṭu n.<>வேண்டு- + படு-. (Gram.) Words which are understood, in an elliptical construction; பொருள் நிரம்புதற் குரியதாய்த் தொக்குநிற்குஞ் சொற்றொடர். நின்ற வில்லி: வீரபத்திரதேவர்க்கு எதிரே பொருதற்கு நின்ற வில்லியென்பது வேண்டப்பாடு (தக்கயாகப். 704, உரை). |
வேண்டுகோள்வரி | vēṇṭukōḷvari n. A tax; வரிவகை. (S. I. I. iv, 79.) |
வேணத்தக்கின | vēṇa-t-takkina adj. <>வேண + தக்கு-. Sufficient; போதுமான. வேணத்தக்கின தருமங்கள் செய்து (சித். நாய. 13). |
வேணபடி | vēṇa-paṭi adv <>id.+. According to one's need or requirement; வேண்டியவாறு. வேணபடி யந்தரங்க மோதலாம் (தெய்வச். விறலிவிடு. 140). |
வேதககுரு | vētaka-kuru n. <>vēdaka+. Preceptor who enables his disciple to realise the Truth; மாணவனுக்குத் தத்துவத்தைத் தரிசிக்கச் செய்யுங் குரு (விவேகசிந். 28). |
வேதத்திரயம் | vēta-t-tirayam n. <>vēda+. (Jaina.) The three vētam or sinful ations, viz., puruṣa-vētam, stirī-vētam and napuca-vētam; புருஷவேதம் ஸ்திரீவேதம் நபுஞ்ச வேதம் என்ற மூவகைத் தோஷங்கள். (மேருமந். 434, உரை.) |
வேதனை | vētaṉai n. <>vēdanā. (Jaina.) A kind of karma; வேதநீயம் என்னுங் கருமம். |
வேதாந்தவாரியன் | vētānta-vāriyaṉ n. <>வேதாந்தம்+. A title of Vēdanta Desikar; வேதாந்ததேசிகாது பட்டப்பெயர்களு ளொன்று. வேதாந்தவாரிய னென்றியம்ப நின்றோம் (தேசிகப். 3, 37). |
வேதி | vēti n. <>வேதி-. Weapon; ஆயுதம். பந்தமொடு பல்வகைய வேதிகள் பரித்து (இரக்ஷணிய. பக். 44). |
வேதியர் | vētiyar n. <>வேதம். Catechist; உபதேசியார். Chr. |
வேமண்கல் | vē-maṇ-kal n. <>வே-+மண்+. Brick; செங்கல். வேமண்கல்லே விரிசுடர்ச்செம் பொற் றிண்கல்லாயின (பெரியபு. ஏயர். 50). |
வேய்நெல்லு | vēy-nellu n. prob. வேய்+. A customary due from the cultivator; குடிகள் செலுத்துங் கடமைகளு ளொன்று. (T. A. S. iii, 32.) |
வேர் | vēr n. cf. வேரல். Bamboo; மூங்கில். வேர் என்று மூங்கிலுக்குப் பேராய் (திவ். பெரியாழ். 2, 6, 1, வ்யா. பக். 360). |
வேர்வாளி | vērvāḷi n. An ear-ornament; காதணிவகை. (S. I. I. viii, 68.) |
வேரியன் | vēriyaṉ n. prob. vairin. Foe; சந்துரு. பண்டை வேரியர்கடாம் (நீலகேசி, 95). |
வேலிநாயகம் | vēli-nāyakam n. prob. வேலி+. An executive office in a village administration; கிராமஉத்தியோகங்களு ளொன்று. (M. E. R. 191 of 1925.) |
வேலைக்காரன் | vēlai-k-kāraṉ n. <>வேலை+. Rake; வைக்கோல் தள்ளுந் தடி. (J. N.) |
வேற்றுக்குடக்கன்வெட்டு | vēṟṟu-k-kuṭakkaṉ-veṭṭu n. prob. வேறு+. An ancient coin; பழையநாணயவகை. (பணவிடு. 133.) |
வேற்றுமைநிலை | vēṟṟumai-nilai n. <>வேற்றுமை+.(Rhet.) A figure of speech; பொருளணிவகை. (யாப். வி. பக். 511.) |