English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
watery
a. நீராளமான, மிகுதியும் நீர்கொண்டுள்ள, பெரிதும் ஈராமான, கண்கள் வகையில் நீர் கசிகிற, உதடுகள் வகையில் எச்சில் வடிகிற, நீர்த்த, நீர்மங்கள் வகையில் நீர்கலத்தலால் செறிவு குறைக்கப்பட்ட, நீர்போன்ற, சொல்லமைப்பு-பேச்சு-எழுத்து நடை வகையில் சுவையற்ற, சத்தற்ற, செறிவற்ற, எழுச்சியற்ற, மந்தமான, கிளர்ச்சியற்ற, கவர்ச்சியற்ற, வலுக்குறைந்த, நிறம் வகையில் வெளிறிய, சாயம்போன, மழைவருங்குறிகாட்டுகிற.
watt
n. (மின்.) மின்னாற்றல் விசையான அலகு, வினாடி ஒன்றுக்கு வேலை ஊக்க ஆற்றலின் ஓர் அலகு செயற்படும் வீதம்.
wattle
-1 n. மிலாற்றுப்படல் வேய்வு, வேலிகள்-சுவர்கள்-கூரைகள் வகையில் பின்னி முடைதற்கான கம்பு வழிகள், இடையீட்டுத் தடைவேலி வகை, (வினை.) கழிகம்புகளை இடை மிடைந்து பின்னு, மிலாற்றுப்பாடல் அடை.
wattles,
n. pl. இடைமிடைவுக் கம்பு கழிகள்.
wattmeter
n. மின்விசை மானி.
waul
v. அலறு, பூனை போற் கத்து.
wave
n. அலை, நீர்த்திரை, உடைதிரை, கரைமீது சுழன்று அடிக்கும் அலை, குமுறும் அலை, அதிர்வலை, காற்றின் அலையதிர்பு விசும்புவெளியில் ஆற்றில் அலையதிர்பு, ஒலி அதிர்வியக் அலை, தற்காலிக எழுச்சி, திரை வரை, திரைவளைவு, அலைபாய்வுப் பரப்பு, திரைபடு, நிலை, நௌிபடுமியல்பு, அசைத்துக் காட்டுஞ் சைகை, (வினை.) அதிர்வுறு, கிளர்வுறு, காற்றில் அலையோடு, நடுங்கு, துடி, விழுந்து விழுந்து எழு, அலையாடும் இயக்கமூட்டு, கையசை, கையிற் பிடித்துள்ள பொருளை ஆட்டு, கையசைத்துக் கட்டளையிடு, கையிற் பிடித்துள்ள பொருள், ஆட்டி ஆணையிடு, கையசைத்துப் போகும் படி சொல், கையசைத்து அருகே வரும்படி சொல், கையலிசத்து விடைகொடு, தலைமயிரக்கு அலையலையான தோற்றங்கொடு, உருவரைக் கோடுகளுக்கு நௌிவு வெளிவான வடிவங்கொடு, நௌிவுடையதாக்கு, திரவுபடச் செய், அலையலையான தோற்றங் கொண்டிரு, திரைவுள்ளதாயிரு.
wave-length
n. (இய.) அலைநீளம்.
waver
v. தள்ளாடு, தடுமாற்றமுறு, தயக்கங்காட்டு, மனஉறுதியற்றிரு, திடசித்தமில்லாதிரு, கொள்கையில் தளர்வு காட்டு, பின்வாங்கத்தொடங்கு, நடுங்கு.
wavering
n. தள்ளாட்டம், தடுமாற்றம், தயக்கம், ஊசலாட்டம், (பெ.) தள்ளாடுகிற, ஊசலாடுகிற, உறுதியற்ற.
wavey
n. பனிப்பிரதேச வாத்து வகை.
waviness
n. அலையலையாயிருக்கும் நிலை.
wavy
-1 n. பனிப்பிரதேச வாத்து வகை.
wax
-1 n. மெழுகு, தேன்மெழுகு, தேனடையின் சக்கை, விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு, மெழுகொத்த பொருள், சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு, காதுக்குறும்பி, ஒலிப்பதிவு கருவு, (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட, (வினை.) மெழுகிடு,மெழுகு மேற்பூச்சிடு, மெழுகுக் கவசமிடு, மெழுகினால் மெருகிடு, ஒலிப்பதிவுக் கருவியிற் பதிவு செய்.
wax-chandler
n. மெழுகுத்திரிகள் செய்பவர், மெழுகுத்திரிகள் விற்பவர்.
wax-insect
n. மெழுகுக் கசிவுடைய பூச்சி வகை.
wax-light
n. மெழுகுத்திரி விளக்கு.
wax-myrtle
n. ஒளிதரும் கொட்டை வகை, ஒளிக்கொட்டை மரவகை.
wax-painting
n. சூட்டோவியம், மேற்பரப்பில் சூடிட்டு உள்வரை மூலம் வரையப்படும் வண்ண ஓவியம்.