English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
volumetric
a. காற்றின் பரும அளவை சார்ந்த, இயந்திரத்தின் காற்றுட்டு வேக அளவை சார்ந்த.
volumetrical
a. காற்றின் பரும அளவை சார்ந்த.
voluminal
a. பரும அளவு சார்ந்த.
voluminosity
n. பாரிய அளவுடைமை, பல பிரிவுகளையுடைய விரிவகற்சியுடைமை, பல்மடிச் சுருளுடைமை, எழுத்தாளர் வகையில் பாரிய அளவான எழுத்து வளமுடைமை.
voluminous
a. பல தொகுதிகளையுடைய, பல பிரிவேடுகளை உட்கொண்ட, பல ஏடுகளை எழுதியுள்ள, வளமான எழுத்தாண்மை சான்ற, பாரிய, மிகப்பெரிய, உறுமொத்தையான, (பே-வ.) பூவேலைத் தொங்கல் வகையில் ஒழுங்கற்று விரிவகற்சியுடையதான, (அரு.) புகை-பாம்பு-முதலியவற்றின் வகையில் திருகுமறுகலாச் சுருண்டுருண்டு செல்கிற, சுருள் மடிவுக்கோப்பான.
voluntariness
n. தன் விருப்பார்வம்.
voluntary
n. தன் விருப்பார்வச் செயலர், தனிமேளம், திருக்கோயில் வஸீபாட்டு முறையில் தொடக்க இடை இறுதிகஷீல் நிகழ்த்தப்பெறும் தனி இசைப்பேழை வாசிப்பு, தன் விருப்பார்வக் கோட்பாட்டாளர், சமயத்துறைத் தன்னியலாட்சியாளர், கல்வித்துறைத் தன்னயலாட்சி முறைமை, படைத்துறை-கடற்படைத்துறை முதலியவற்றில் தன் விருப்பார்வ ஆட்சேர்ப்பு முறைமை, குதிரை ஏற்ற வகையில் வேண்டா வீழ்ச்சி, (பெ.) தன்னியலான, மனமார்ந்த, தன் விருப்பார்ந்த, தன் விருப்பத் தேர்வான, தன்னார்வ முனைப்பான, வலிய முன் வரலான, புறத்தூண்டுதலற்ற, முன் வந்து ஏற்கப்பட்ட, கோராது வழங்கப்பெற்ற, மனமாரச் செய்யப்பட்ட, மனமாரத் தெரிந்து செய்யப்பட்ட, கைம்மாறு எதிர்நோக்காது செய்யப்பட்ட, தன் முனைப்பாகத் திட்டமிடப்பட்ட, தெரிந்து வேண்டுமென்றே செய்யப்பட்ட, தன் விருப்பச் செயல் விளைவான, தன் விருப்பார்வ வழங்கீட்டுத் தொகையினால் நடத்தப்படுகிற, முறைமன்றத் தலையீடின்றித் தாமாகச் செய்துகொள்ளப்பெற்ற, நிறுவனங்கள் வகையில் அரசியற் கட்டுப்பாடற்ற, உள்ளுறுப்பு நாடிநரம்பு முதலியவற்றின் வகையில் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயக்கப்பட்ட.
voluntaryism
n. தன் விருப்பார்வச் செயன்முறைக் கோட்பாடு.
voluntaryist
n. தன் விருப்பார்வச் செயன்முறைக் கோட்பாட்டாளர்.
volunteer
n. விருப்பார்வத் தொண்டர், ஆர்வ ஊஸீயர், ஆர்வப் படைவீரர், (வி.) விருப்பார்வமாக மேற்கொள், முன்வா.
voluptuary
n. சிற்றின்பத் தோய்வாளர், (பெ.) சிற்றின்பத் தோய்வான.
voluptuous
a. இன்பக் கஷீயாட்டயர்வான, சிற்றின்பக் கஷீயாட்டிலாழ்ந்த, சிற்றின்பத் தோய்வான, ஐம்புல இன்பமே நாடிய.
voluted
a. திருகுசுருள் வடிவான.
volutin
n. உயிர்ம நிறமிப்பொருள்.
volution
n. திருகுசுருள்வு, (உள்.) திருகுசுருள் வடிவுடைமை, திருகுசுருள் மடிப்புடைமை.
volutoid
n. கவின் சோஸீ நத்தையினம், (பெ.) கவின்சோஸீ நத்தையினஞ் சார்ந்த.
vomer
n. (உள்.) இடை நாசி எலும்பு.
vomerine
a. இடை நாசியெலும்பு சார்ந்த.
vomica
n. கக்கல் நீர்மம் உள்ளடங்கிய சிறு ஈரற் பை.
vomit
n. வாந்தியெடுத்தல், கக்கல், வாந்தியுண்டாக்கும் மருந்து, (வி.) வாந்தியெடு, ஓக்கஷீ, உமிழ், எரிமலை வகையில் அழலை வாரி எறி, உள்ஷீருந்து வெஷீயே தள்ளு.