English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
toiling
n. கடும் உழைப்பு, உழைப்புத் துன்பம், (பெயரடை) தொண்டுழைப்புச் செய்கிற.
toils
n. pl. வலை, கண்ணி, சிக்குபொறிச்சூழ்ச்சி.
toilsome
a. கடுமம் உழைப்புடைய.
toilsomely
adv. கடும்உழைப்பு மேற்கொண்டு.
Tokay
n. அங்கேரி நாட்டு மதுவகை, அங்கேரி நாட்டுக் கொடிமுந்திரி வகை.
toke
n. உணவு, உலர் அப்பம்.
tolbutamide
n. நீரிழிவுநோய் மருந்து வகை, ராஸ்டினான், ஒரிநாசா.
told
v. 'டெல்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
tolerable
a. பொறுத்துக்கொள்ளத்தக்க, நடுத்தரமான, ஒருவாறு ஒத்துக்கொள்ளத்தக்க.
tolerableness
n. நடுத்தர நிலைமை, ஒத்துக்கொள்ளாக் கூடிய அளவு, பொறுத்துக்கொள்ளக்கூடிய நிலை.
tolerably
adv. நடுத்தரமாக, தரக்கேடின்றி, சுமாராக.
tolerance
n. சகிப்புத்தன்மை, பொறுத்தமைவுப்பண்பு, ஒத்துணர்வுத்திறம், பொறுத்திசைவு, இடங்கொடுப்பு, கண்டிப்பின்மை, தடைசெய்யாமை, வெறுப்பின்மை, எதிர்ப்பின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மை, வேறுபாட்டு ஏற்பமைவு, கருத்து ஒப்புரவுணர்வு, சமரச மனப்பான்மை, இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு, கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி, நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி, (மரு) தாங்கமைவுத்திறம், (தாவ) நிழல், வளர்வமைவுத் தன்மை, (பழ) தாங்குதிறம்.
tolerant
a. பொறுதியுடைய, சகிப்புத்தன்மை வாய்ந்த, பொறுத்தமைவுப்பண்புடைய, இசைவமைவு காட்டுகிற, ஒத்துணர்வுத்திறமுடைய இடங்கொடுக்கிற, கண்டிக்காது விடுகிற, வெறுப்புக்காட்டாதிருக்கிற, ஒத்துடந்தையாயிருக்கிற, மட்டின்றி இளக்கங்காட்டுகிற, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, கருத்துச்சுதந்திரம் அளிக்கிற, சமயசமரச மனப்பான்மையுடைய, சமயசமரசங் காட்டுகிற, சமயசமர சச் சார்புகொண்ட, சமயசமரசக் கோட்பாட்டை ஆதரிக்கிற, (மரு) தட்பவெப்பச் சூழ்நிலைமாறுதல்-ஒட்டுயிரித்தாக்கு மருந்துச்சரக்கு ஆகியவற்றின் வகையில் எதிவிளைவுகளின்றி ஏற்றமையும் திறம்வாய்ந்த, (தாவ) கிட்டத்தட்ட நிழலில் வளரத்தக்க, (இயந்) கூறுகளின் நுண்ணிடை வேறுபாடுகள் வகையில் இசைவளவான.
tolerate
v. பொறுத்துக்கொள், சகிப்புத்தன்மைகாட்டு, ஒப்புரவுகாட்டு, கண்டிக்காது விடு, பிறர் கொள்கை வகையுல் கடிவு தவிர், தடைசய்யாது, இடங்கொடு, விட்டுக் கொடுப்பு மனப்பான்மை கொள், செயலிசைவு காட்டு, செய்யவிடு, செயலிசைந்திரு, செயல்-தொடர்பு ஆகியவற்றின் வகையில் பொறுத்தமைவுறு, வாழவிடு, வாழவிட்டிசைந்து வாழ்வுகொள், இசைவமைதிகாட்டு, ஒத்திசைந்தமை, சமுதாயத்துடன் இணக்க அமைதி காட்டு, தாங்கு, பொறு, பழக்கவழக்க வகையில் ஏற்றமைவுறு, செயல் வகையில் பொறுப்பமைதி காட்டு, ஆள்-செயல் வகையில் வாளா பொறுத்துக்கொண்டிரு, (மரு) மருந்து-தட்பவெப்பநிலை, ஒட்டுயிரி ஆகியவற்றின் வகையில் பாதிக்கப்பெறாமல் ஏற்றமைவுறு.
toleration
n. பொறுத்தமைதல், வாழவிட்டு வாழ்தல், சகிப்புத்தன்மை, பொறுதி, பொறுத்தமைவு, ஏற்றமைவு, சமரச மனப்பான்மை, ஒத்துடம்படு நிலை, ஒப்பிசைவமைதி, கருத்துச் சுதந்திர அமைதி, ஒப்புரவாண்மை, சிறுபாண்மைக் காப்பிணக்க அமைதி.
tolerationist
n. சமயசமரசக்கோட்பாட்டாளர், சமரசக் கோட்பாட்டு ஆதரவாளர்.
toll
-2 n. சேகண்டை ஒலி, கண்டாமணி ஓசை, (வினை) சேகண்டையடி, மணிஓசை முழங்கு, மணிஓசை முழக்குவி, சேகண்டையடித்து அழை, சேகண்டை அடையாள ஒலி எழுப்பு, சேகண்டை அடையாள ஒலி மூலம் செய்தி அனுப்பு, சேகண்டையடித்துத் தெரிவி, சாமணியடி, இழவிக்குறிப்பாக மணியடி.
toll-bar
n. சுங்கவரி எல்லைத்தடுப்பிடம்.
toll-call
n. தொலைபேசிக் குறுந்தொலை அழைப்பீடு.
toll-free
a. சுங்கவரியற்ற, (வினையடை) சுங்கவரியில்லாமல்.