English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
the day
குறிப்பிட்ட காலம். எதிர்பார்த்த காலம்.
the day after the fair
காலங்கடந்து.
the decencies
நாகரிக முறைகள், உயர்வாழ்க்கை தகுதிக் கூறுகள்.
the devil and his dam
தீயசக்திகள்.
the other day
பொஞ்ச காலத்துக்க முன்.
the sword of Damocles,
அரசவாழ்வின் நிலையாமை அறிவுறுத்த டஸ்னிசாஸினால் டமோக்ளிஸீக்கு அரச விருந்தளித்து விருந்தின்போது அதன் தலைமீது ஒற்றை மயிரில் தொங்கவிடப்பட்டவாள், இன்பத்திடைப் பேரிடர் நிலை.
the time of day
கடிகாரப்படியான மணி நேரக்குறிப்பு.
theandric
a. இறையுயிர் இணைவான, இயேசுநாதர் வகையில் தெய்வ மனித ஒருங்கிணைவு நிலையினையுடைமை.
theanthropic, thanthropical
a. தெய்வப்பண்பும் மனிதப்பண்பும் உடனொத்திணைந்தியைந்த, தெய்வத்தை மனதவுருவேற்கச் செய்கிற.
thearchy
n. கடவுளாட்சி, புரோகிதராட்சி, தெய்வீக ஆட்சியர்.
theatre
n. நாடகக் கொட்டகை, ஆடலரங்கு, நாடகத்துறை, நாடகத்தொழில், நடிப்புத்துறை, நாடக இலக்கியம், நாடகக் கலை, நாடகப் பார்வையாளர் தொகுதி, காட்சி வெளியரங்கம், சூழ்படியடுக்க வரிசைக்கூடம்., புலவர் தனியாராய்ச்சிக் கூடம், தனி அறுவைக்கூடம், சொற்பொழிவு அறை, பேருரைக்கூடம், பெருஞ்சொல் மண்டபம், செயற்களம், செயலரங்கம், நிகழ்ச்சி அரங்கம், நாடக மேடைச் செய்தி, நாடகமேடைப் பாணி.
theatre-goer
n. அடிக்கடி நாடகம் பார்ப்பவர்.
theatre-going
n. நாடகமேடை ஊடாட்டம்.
theatric
a. நாடக மேடைக்குரிய.
theatrical
a. நாடகக்கொட்டகைக்குரிய, நாடகமேடைக்குரியது போன்ற, நாடகத்துக்குத் தகுதியான, நடிகருக்குரிய, நடிகர்போன்று நடிக்கிற, நடிகர் இயல்பு வாய்ந்த, நடிகருக்குத் தகுதியான, நடிப்புக்குரிய, நடிப்பியலான, நடிப்புக்குத் தகுதிவாய்ந்த, நாடக மேடைச் சாயலான, பிறர் உணர்ச்சி தூண்டுகிற, பிறர் கண்டு மகிழ்தற்காகவே நிகழ்த்தப்படுகிற, பிறர் கவர்ச்சி நாடியே அமையப்பெற்ற, புறப்பகட்டான.
theatricalism
n. நாடகமேடைப் பண்பு.
theatricality
n. நாடகமேடைப் பண்பு முனைப்பு, பகட்டாரமாரத் தன்மை, போலிப்பகட்டு, செயற்கை நடை.
theatricalize
v. நாடகப்பண்பூட்டு, நாடகமேடைக்கு இயைவி, நாடகமேடை நடிப்புப் போன்றதாக்கு.
theatrically
adv. நாடகமேடை முறையில்.
theatricals
n. pl. நாடகக் காட்சிகள், நாடகமேடையாட்கள், நாடகமேடைத் தட்டுமுட்டுப் பொருள்கள், நாடக மேடைச் செய்திகள்.