English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tenail, tenaille
ஞாயில் இடைவரி, அரண்வகையில் இரு ஞாயில்களிடைச் சுவருக்கும் முதலகழுக்கும் இடைப்பட்ட புறக்கட்டுமான மேடை.
tenantable
a. தங்கிவாழத்தக்க, இடவகையில் குடியிருக்கத்தக்க, குடிபுகத்தக்க.
tenantry
n. குடியிருப்பவர் தொகுதி, குடியாள் வகுப்பு.
tench
n. நன்னீர் மீன் வகை.
tend
-1 v. நாடு, நாடியியங்கு, நோக்கிச் சாய்வுறு, இயற்சார்புகொள், வழியேகு, வழிப்படு, இயற்போக்குடையதாயிரு, இயற்பாங்குடையவராயிரு, உகந்ததாயிரு, உதவு, துணைப்பண்பாயிரு, துணைமைகொள், துணைமைகொள், நேர்வுறு, நேரிடு.
tendency
n. போக்கு, சார்பு, இயற்சாய்வு மனப்பாங்கு.
tendentious
a. குறிக்கோள் பரப்பும் வகையிலுள்ள.
tender
-2 n. ஒப்பந்தப்புள்ளி, குறிப்பிட்ட விலை வீதத்தில் பொருள் வழங்குவதற்கான இசைவேற்பு, குத்தகையேற்பு, குறிப்பிட்ட தொகைக்கு வேலை முடித்துக்கொடுக்கும் பொறுப்பேற்பு, வழங்குதற்கான இசை, வழங்குதற்கிசைந்த பொருள், (சட்) தடங்கலற்ற ஒப்படைப்பு, (சட்) ஏற்பு மறுக்கமுடியாச் செலாவணி, (வினை) ஒப்பந்தப்புள்ளி கொடு, ஒப்பந்தப்பணி மேற்கொள், ஏற்புக்கு ஒப்புவி, முறைப்படிக் கெபாடுக்க முன் வா, முறைப்படிப் பொருள் ஒப்படைத்துவிடு, தர இசைவு தெரிவி, தொகை வழங்கு, கையடைவு செய், தர முற்படு, எழுத்துமூலம் ஒப்பந்தப்புள்ளி ஏற்பாட்டிற்கு ஏற்பளி.
tender-eyed
a. அமர்ந்த கண்ணுடைய.
tender-foot
n. புதர்க்காட்டுக்குப் புதிதாக வந்த ஆள், புது ஆள்.
tender-hearted
a. கனிந்த இதயமுடைய, இளகிய நெஞ்சுடைய.
tender,
-1 n. பாதுகாப்பவர், காத்துப் பேணுபவர், உடனிருந்து உதவுபவர், உய்ப்புதவிக் கப்பல், பெரிய கப்பலுக்கு வேண்டிய எரிபொருள் கொண்டுசென்று உதவுஞ் சிறு கப்பல், துணையுதவிக் கப்பல், உய்ப்புதவிப்பெட்டி.
tenderling
n. ஆண்மையற்றவன், கோழை, பேடித்தனமானவன், குழந்பிள்ளை, மிகுவெல்வத்தால் கெட்டழிந்தவன்.
Tenderloin
-1 n. நியூயார்க்கு வட்டார நகரங்கள் சார்ந்த கேளிக்கைப் பகுதிகள்.
tenderly
adv. மென்மையாக, மென்கனிவாக, ஆதரவாகப் பேணி.
tenderness
n. இனமென்மை, இன்கனிவு, இரக்கம்.
tenderometer
n. காய்ப்பத மானி.
tendinous
a. தசைநாண் சார்ந்த.
tendon
n. தசைக்கோடியிலோ சதைத்தொடர்புற்றோ உள்ள வல்லிழைமத் தளை.
tendril
n. தளிர்க்கை, கொடிகளின் தளிரிழை.