English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Teian
a. பண்டைய கிரேக்க கவிஞரிடையே தியாஸ் என்னுந் தீவுக்குரிய, தியாஸ் தீவிற் பிறந்த அனக்ரியான் என்னுங் கிரேக்க கவிஞனுக்குரிய.
teind
n. பதின்மை வரி., ஸ்காத்லாந்துநாட்டு வழக்கில் பத்தில் ஒரு பங்கு வரி, மகன்மை.
teknonymy
n. சேய்வரு பெயர்மை, குழந்தையினின்று பெற்றோருக்குப் பெயர் வழங்கும் முறைமை.
telaesthesia
n. தொலைவுண்ணோக்கு உணர்வு, காணாத் தொலை நிகழ்ச்சிகளையும் புலன்கடந்த காட்சிகளையும் நேரே காணும் ஆற்றல்.
telaesthetic
a. தொலைவுண்ணோக்கு உணர்வு சார்ந்த.
telautogram
n. வரைவுருத் தந்திச் செய்தி.
telautograph
n. வரைவுருத் தந்திமுறை சார்ந்த.
tele-car
n. தந்திச்செய்தியை வாங்கவும் உடனடி யாக முகவரியாளரிடன்ம் சேர்க்கவும் வாய்ப்புள்ள உந்துகலம், சேயம்மைச்செய்தி இணைப்பு.
tele-deltos
n. தந்தியுந்துகலத் தாள், தந்தியுந்துகலத்தில் செய்தி அச்சடிக்கப் பயன்படுத்ததுந் தாள்.
tele-jake
n. தொலைக்காட்சிப் பாடற்பெட்டி, துளையில் காசிட்டுக் குமிழ், அழுத்தியவர்க்கு விரும்பிய பாடல் பாடிக் காடசி காட்டும் பெட்டி.
tele-radio
n. தொலைக்காட்சி வானொலிகள்.
tele-ran
n. வானியக்குதிறல், தொலைபேசி சேணளவி மூலம் விமானத்திரையில் செய்திகாட்டி விமானம் இயக்கும் முறை.
telearchics
n. pl. சேணியக்கு திறல், வானுர்தி வகையில் கம்பியில்லாத் தந்திமூலம் தொலைவியக்கங் கட்டுப்படுத்தும் முறை.
telebarometer
n. சேணிலை வளியழுத்தமானி.
telecast
n. தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொலைக்காட்சி மூலம் அனுப்பப்படும் வானொலி நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் திட்டம்.
telecommunication
n. தொலைப்போக்குவரத்து, தந்தி-கடலடி வடக்கம்பி-கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச்செய்தி அறிவிப்புமுறை.
telecon
n. வானொலித் தொலைமுறை மாநாட்டு அமைவு, வானொலி-தந்திவட இணைப்பு மூலம் தொலைக்காட்சித் திரையில் செய்தி ஒளியிட்டுக்காட்டிப் பவர் ஒருங்கு கலந்தாய்வு செய்ய உதவும் அமைவு.
teledu
n. முடைநாற்றம் வீறூம் தென்கிழக்காசிய வளைக்கரடி வகை.
telefilm
n. தொலைக்காட்சித் திரைப்படம்.