English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tunic
n. தளர் மெய்யங்கி, பண்டைக் கிரேக்கர்அல்லது ரோமரின் முழந்தாளளவான குறுங்கைத் தளருடை, இடுப்பில இறக்குறும் மகளிர்தளராடை, படைவீரர் மெல்லுடை, காவல் துறையினர் மெய்யுடை, (வில) கடல் இப்பி வகையின் தோற்பேர்வை, (உள்) உறுப்பைப் போர்த்துள்ள தசை இழைமம், (தாவ) தண்டங் கிழங்கு மேற்றோலிழைமம்.
tunicate
n. தோடுடைய விலங்கினப் பிரிவு, (பெயரடை) (வில, உள், தாவ) மேல் தோடார்ந்த.
tunicle
n. தளர் மெல்லங்கி, (தாவ, வில) தளர் மேல் தோல், சமயகுரு உடை.
tuning
n. பண்ணமைப்பு, இசைப்பு, ஒத்தியைவிப்பு, சுதியமைப்பு, கருவி இயைவிப்பு, (பெயரடை) இசைக்கிற, ஒத்தயைவிக்கிற, சுதியமைக்கிற, கருவி இயைவிக்கிற.
tuning-fork
n. இசைக்கவடு, ஈரலகு வில்லமைவுடைய நிலையான சுர அதிர்வு அமைவு வாய்ந்த இசை ஒலிக்கருவி.
tuning-hammer
n. இசைப்பேழை ஆணி முறுக்கு கருவி.
tunnel
n. சுருங்கைப் பொறி, ஊடுபுழைவழிக்கருவி.
tunnel-net
n. தூம்புவலை, வாய்ப்பக்கம், பெருத்தும் வாற்புறஞ் சிறுத்தும் உள்ள மீன் வலை.
tunny
n. பெருங்கடல் உணவு மீன் வகை.
tuny
a. இசை வகையில் கவரும் பண்ணமைவுடைய.
tuppence
n. (பே-வ) இரண்டு செப்புத்துட்டு மதிப்புடைய பணம்.
tuppenny
n. (பே-வ) இரண்டு செப்புத்துட்டு விலையுடைய தேறல் வகை, பச்சைக்குதிரை விளையாட்டில் தலை, (பெயரடை) இரண்டு செப்புத்துட்டு மதிப்புடைய, மிக மலிந்த, பயனற்ற.
tupy
a. ஆட்டுக்கடா, பாவுதளச் சம்மட்டி, அடித்தளப் பதிகால் சம்மட்டியின் மொந்தை, நீராவிச் சம்மட்டியின் தாக்கு முகப்பு, (வினை) ஆட்டுக்கடா வகையில் மறியுடன் விணைவுறு, ஆட்டுமறி வகையில் ஆட்டுக்கடாவினிடம் பிணையவிடு.
tuque
n. கனாடா நாட்டுக் குல்லாய் வகை.
turacin
n. ஆப்பிரிக்க பறவைகளின் இறகுகளிலுள்ள கரைமச் செவ்வண்ணப்பொருள்.
turacover,din
ஆப்பிரிக்க பறவைவகையின் இறகிலுள்ள பசுமை வண்ணப் பொருள்.
Turanian
n. துரேனிய இனக்குழுவினைச் சார்ந்தவர், துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுபவர், ஆரிய செமித்திய இனத்தவரல்லாத ஆசிய இனக் குழுவினர்., யூரல்-அல்தேயிக் இனத்தை உள்ளடக்கிய போனத்தவர், (பெயரடை) துரேனிய இனக்குழுவினைச் சார்ந்த, துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுகிற.
turban-shell
n. திருகுசுருள் சிப்பி வகை.
turban-stone
n. தலைக்கல் தூபி, உச்சியில் தலைப்பாகையுருவஞ் செதுக்கப் பெற்றுள்ள முஸ்லீம் கல்லறை நடுகல் தூபி.