English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
try
n. முயற்சி முனைவு, ஒரு தடவை முயற்சி, முயற்சித் தேர்வு, முயற்சி வாய்ப்பு, இலக்கடி முயல்வுரிமை, காற் பந்தாட்டத்தில் பந்தை எடுத்துச்சென்று வது இலக்கடிக்கும் உரிமை, பந்தை இலக்கு வரையில் கொண்டுய்ப்பதனால் ஆட்டக்காரர் பெறும் மூன்று கெலிப்பெண் உரிமை, (வினை) முயற்சி செய், முயலு, சேர்ந்தாராய், சோதனை செய், பொருள் வகையில் முயன்று பார், எடுத்துப்பார், செயல் வகையில் முயன்று பார், ஆள் வகையில் தொடர்புகொண்டு பார், வேலையில், அமர்த்திப்பார், ஈடுபடுத்திப்பார், தேர்ந்து விளைவு நாடு, வழங்கிப் பார், நுகர்ந்து காண், அனுபவத்தில் கண்டறி, மருந்து வகையில் பயன்படுத்திப் பார், பண்புக்குரிய கடுஞ் சோதனையாயமை, கடுஞ் சோதனைக்கு உள்ளாக்கு,. துன்கத்திற்கு உட்படுத்து, வருத்து, வருத்த மூட்டு, பாரமாயமை, முறைமன்ற விசாரணைக்கு உட்படுத்து, குற்ற விசாரனை புரி, தோந்து தீர்வு செய், தள மெருகீட்டுக் கடைசித் தீர்வு செய், இழைப்பு முற்றுவி, உலோகம் கொழுப்பு எண்ணெய் முதலியவற்றின் கொதி உருக்கீட்டு முறைளகளால் துப்புரவு செய், புரமிட்டுக்காண், தேர்ந்தெடு, தேர்ந்து பிரித்தெடு, ஆடை வகையில் போட்டுப் பார், உரத்திச்சரிபார்.
try-on
n. உடையணிந்து பார்த்தல், (பே-வ) ஏமாற்றும் முயற்சி.
try-works
n. திமிங்கிலக் கொழுப்புச் சுத்தி செய்வதற்கு உதவும் கருவிகல அமைவு.
tryer
n. மரப்பந்தாட்டத்தில் கெலிப்புற அருமுயற்சி செய்பவர்.
trying
n. முயலுதல், (பெயரடை) கடுஞ் சோதனையான, மிகக் கடுமைவாய்ந்த, தாங்க முடியாத் தொல்லைகள் தருகிற.
trying-plane
n. மெருகு தீர்வு இழைப்புளி.
trying-square
n. மூலவட்டப் பலகை, ஒருபுறம் மரக்கட்டையும் மறுபுறம் இரும்புமாக அமைந்த தச்சர் சதுரக் கருவி.
tryingly
adv. மிகக் கடுநிலையுடையதாக.
trypanosome
n. உறக்க நோய் முதலிய உண்டு பண்ணும் குருதி ஒட்டுயிர் வகை.
trypsin
n. கணையச்சுரப்பி நீரின் கருநிலை நொதிக்கூறு.
trysail,
n. (கப்) பகரப்பாய், புயற் காலத்தில் சிறுகலங்கள் பயன்படுத்தும் பாய்வகை.,
tryst
n. இடந்தலைப்பாடு, குறியிடச் சந்திப்பு, (வினை) குறியிடந்தலைப்பாடு ஏற்பாடு செய், குறியிடந் தலைப்பாட்டிற்குரிய கால இடங் குறிப்பிடு, குறியிடஞ் சந்திக்க உறுதி கொடு.
trzmontane
n. அப்பாலையர், ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு வடக்கே வாழ்பவர், அன்னியர், நாகரிகமற்றவர், (பெயரடை) அப்பாலைய, ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு வடக்கிலுள்ள.
tsar
n. முன்னாள் வழக்கில் ருசியநாட்டுச் சக்கரவர்த்தி.
tsarevich, tsarevitrch
n. முன்னாள் வழக்கில் ருசிய நாட்டுச் சக்கரவர்த்தி மகனின் மனைவி.
tsarism
n. ருசிய சக்கரவர்த்தி மகள், ருசிய சர்க்கரவர்த்தி மகனின் மனைவி.
tsarist
n. ருசிய சக்கரவர்த்தி ஆட்சி, ஆதரவாளர், வன்முறையாட்சி ஆதரவாட்சி.
tsaritsa
n. ருசியநாட்டுச் சக்கரவர்த்தினி.
tsesarevich, tsesarevitch
n. ருசிய சக்கரவர்த்தியின் மூத்தமகன், ருசிய சக்கரவர்த்தி பீட அரசுரிமைமயாளன்.
tsetse
n. ஆப்பிதிக்கா கண்டத்துக் கொடு நச்சு உண்ணி வகை, கால் நடைகளைக் கடித்து உயிரைப் போக்கிவிடும் ஆப்பிரிக்க ஈ வகை.