English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
security
n. பாதுகாப்பு, இடர்காப்பு, இடர்காப்புறுதி, கவலையற்ற தன்மை, மட்டுமீறிய தன்னம்பிக்கை, ஈடு, பிணையம், கடனீட்டுப் பத்திரம், பங்குரிமைச் சான்றிதழ், கருவூலப்பண உறுதிச் சீட்டு, உறுதிச் சீட்டு.
Security services
காவல் பணிகள், பாதுகாப்புப் பணிகள்
sedan
n. தூக்கு நாற்காலி, மேனா, அடைப்பு வண்டி.
sedate
a. அமைவடக்கமான, ஆரமைதி வாய்ந்த, மெல்லமைவான, நிலையமைவார்ந்த, உணர்ச்சி உள்ளடக்கிய, எழுச்சியற்ற, உலைவற்ற, சிடுசிடுப்பற்ற, உணர்ச்சி வேகமற்ற.
sedately
adv. நிலையமைதியாக, சமநிலை கொண்டு, உணர்ச்சி உள்ளடங்கப்பெற்று, அதிர்வுற்ற நிலையுற்று, சிடுசிடுப்பற்று, உணர்ச்சி வேகமற்ற பண்புடன்.
sedateness
n. நிலையமைதி, சமநிலை, உணர்ச்சி உள்ளடங்கிய நிலை, அதிர்வுற்ற நிலை, சிடுசிடுப்பற்ற நிலை, உணர்ச்சி வேகமற்ற நிலை.
sedative
n. அமைதிப்படுத்தும் மருந்து, நோவாற்றும் மருந்து, (பெ.) அமைதிப்படுத்துகிற, நோவாற்றுகிற.
sedentarily
adv. ஓடியாடும் பழக்கமின்றி, நிலையமர்வாக.
sedentariness
n. விலங்குவகையில் புலம்பெயராமை, நீர்வாழுயிர் வகையில் அகல நீந்துதலில்லாமை, சிலந்தி வகையில் பதிவிருக்கை.
sedentary
n. அமர்வியற்பாங்குடையார், பதிவியற் சிலந்திவகை, (பெ.) உட்கார்ந்திருக்கும் இயல்புடைய, ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிற, மக்கள் வகையில் குடியமர்வுப் பண்பார்ந்த, நடோடிகளல்லாத, போக்குவரவு நடைப்பழக்கமற்ற, ஓடியாடித் திரியாத, அடிக்கடி பயணஞ் செய்யாத, தொழில்-வாழ்க்கை வகையில் பெரிதும் உட்கார்ந்தே இருக்கவேண்டும் நிலையினையுடைய, விலங்குவகையில் அலைதல் திரிதலற்ற, நீர்வாழ் உயிர் வகையில் தங்குதடையற்று நீந்தாத, சிலந்தி வகையில் பதிவிருக்கிற.
sederunt
n. பேரவை கூடுகை, சமயப் பேரவை அமர்வு, உரையாடல் கூட்டமர்வு, கள்ளாடற் கூட்டயர்வு.
sedge
n. கோரைப்புல், கோரைப்புல் படுகை.
sedge-warbler, sedge-wren
n. கோரையிடை வாழும் இரைப்பறவை வகை.
sedgy
a. கோரைப்புல்லார்ந்த, கோரைப்புல்லிற்குரிய, கோரைப்புல் போன்ற.
sedilia
n. pl. இருக்கைகள், திருக்கோயிலிற் கீழிடைக்கூடத்தில் தென்சுவரோரமாக மேற்கட்டியிட்டும் மூவருக்கெனவும் ஒதுக்கப்ட்டுள்ள கற்பீடம்.
sediment
n. படிவு, மண்டி, வண்டல்.
sedimentary
a. மண்டியான, படிவியஷ்ன, வண்டலாகப் படிந்துருவான.
sedimentation
n. வண்டற் படிவு, படிவியற் படுகை.
sedition
n. ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி, இராசத்துரோகம், அமைதிக்குலைவு.
seditious
a. ஆட்சி எதிர்ப்பான.